செய்திகள் :

முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; ஆபரேஷன் ‘Toofan’ என்றால் என்ன? - கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா

post image

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரளா இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆபரேஷன் Toofan என்றால் என்ன?

கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் முன்னெடுத்து வரும் மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையே ‘ஆபரேஷன் Toofan’ (Operation Toofan – The Narco Hunt) ஆகும். மாநில எல்லைகள், கடலோரப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

ரமேஷ் சென்னிதாலா

இதுகுறித்து பேசிய ரமேஷ் சென்னிதாலா, கேரள அரசு போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல.!

போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஒரு மாநிலத்திற்கு மட்டுப்பட்டதாக இல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது

மாநில எல்லைகள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறைகள் இணைந்து செயல்பட முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேரள காவல்துறைக்கு கிடைக்கும் உளவுத்தகவல்கள் தமிழ்நாடு காவல்துறையுடன் பகிரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

முதலமைச்சர் விஜய்க்கு நன்றி

தமிழகத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட ரமேஷ் சென்னிதாலா, அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் விஜயை அழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மோகன்லால் - விஜய் ஒரே மேடையில்?

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேரளாவின் பிராண்ட் அம்பாசிடராக உள்ள நடிகர் மோகன்லால் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.

தமிழ்நாட்டை மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் முதலமைச்சர் விஜய்யை பெருமளவில் பின்பற்றி வருவதாகவும், அவர் போதைப்பொருட்களுக்கு எதிராக பேசினால் அது இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்!

போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நடைபெற வேண்டிய ஒன்றாகும் என்றும், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ரமேஷ் சென்னிதாலா வலியுறுத்தினார்.

முதலமைச்சர் விஜயுடனான இந்தச் சந்திப்பில் தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், க... மேலும் பார்க்க

காமராசரின் 124-வது பிறந்தநாள் விழா: முட்புதர் மண்டிக்கிடக்கும் மணிமுத்தாறு அணை நினைவுத்தூண்

மழைநீர், வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பல அணைகள் கட்டப்பட்டது, தமிழகத்தை ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் ஆட்சி காலத்தில்தான். அவர் ஆட்சி செய... மேலும் பார்க்க

தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொட... மேலும் பார்க்க

"மோடி சொன்ன ஒரு வார்த்தை; Ironman இலக்கை நோக்கி என்னைத் திருப்பியது!" - அண்ணாமலை

நாளைய பத்திரிகையாளர்களை உருவாக்கும் விகடன் குழுமத்தின் கனவுத் திட்டமான 'மாணவப் பத்திரிகையாளர்' திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம், ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.மாநி... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு செக்: இந்தியா, சீனாவிற்கு 100% வரி? - அமெரிக்காவின் புதிய மசோதா!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கொண்டு வந்தது அமெரிக்காவின் இரு கட்சி ஆ... மேலும் பார்க்க

SIR: ``வாக்காளர் திருத்தப் பணியில் ‘மத’ அரசியல்?"- கடிதம் எழுதிய ஐ.நா; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

ஐ.நா கடிதம்கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் க... மேலும் பார்க்க