செய்திகள் :

`முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய கட்சி; அன்புச் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்' - ஜெகன் மோகன் ரெட்டி

post image

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் தன் எக்ஸ் பதிவில், ``எனது அன்புச் சகோதரர் விஜய்க்கு சிறப்பான மற்றும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்! சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு சாதனை. மக்கள் பணிக்கான இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் உங்களுக்குப் பேராற்றலும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன். இறைவன் எப்போதும் உங்களோடு இருக்கட்டும்.

ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி - விஜய்
ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி - விஜய்

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்கு எனது அனுதாபங்கள் திதி (மம்தா பானர்ஜி) உடன் இருக்கிறது." எனக் குறிப்பிட்ட அவர் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க மற்றும் பிற கட்சிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதை ஒரு அண்டை மாநிலத் தலைவர் அங்கீகரித்துப் பாராட்டுவது, விஜய்யின் அரசியல் வருகை தென்னிந்திய அரசியலில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலையைக் காட்டுகிறது. குறிப்பாக, ஜெகன் மோகன் ரெட்டிக்கும் விஜய்க்கும் இடையே உள்ள நட்பு ரீதியான உறவை இந்த 'சகோதரர்' என்ற விளிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க