செய்திகள் :

"முதல் தேர்தல் களம் இவ்வளவு பிரமாண்டமாக அமைந்தது வியப்பாக இருக்கிறது"- விஜய்யை வாழ்த்திய விஷால்

post image

234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் விஷால் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விஜய்யின் முதல் தேர்தல் களம் இவ்வளவு பிரமாண்டமான தொடக்கமாக அமைந்தது வியப்பாக இருக்கிறது.

வாழ்த்துகள் தளபதி! இந்தத் தருணத்திற்குச் சொந்தக்காரரான அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

தவெக விஜய்
தவெக விஜய்

தமிழகம் முழுவதும் மீண்டும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்து எழுச்சி மீண்டும் ஒருமுறை எதிரொலிக்கிறது. மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பினால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

தற்போதைய அரசியல் சூழலில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான வெளிப்பாடாகும்.

எனது மனதின் ஆழத்திலிருந்து உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தின் வளர்ச்சியையும், தற்போதைய இக்கட்டான சூழலில் இருக்கும் நமது திரையுலகின் மறுமலர்ச்சியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

'ஆளுநரின் இந்த செயல் அருவருப்பானது; விஜய்யை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும்!' - பிரகாஷ் ராஜ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுகவில் இருந்து ... மேலும் பார்க்க

RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" - ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. ... மேலும் பார்க்க

ஆர்.பி.சௌத்ரி: நேரில் சென்று அஞ்சலி; ஜீவாவை ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன விஜய்!

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி உயிரிழந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களை தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி. நாட்டாமை, பூவே உனக்காக, ... மேலும் பார்க்க

"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க

'படமெடுக்க வந்தவருக்கு ஆர்.பி. சௌத்ரி சொன்ன அந்த அட்வைஸ்!' - நினைவுகளைப் பகிரும் பத்திரிகையாளர்

நம் மனதுக்கு நெருக்கமானவரின் இழப்புகள் சில நேரங்களில் நம்மை பெரும் சோகத்தில் உலுக்கி விடும். அப்படி என் இதயத்தைக் கணக்க செய்தது ஆர்.பி.சௌத்ரி சாரின் மரணம். அவரின் அறிமுக நாள்கள் இப்போதும் பசுமையாக நிழ... மேலும் பார்க்க

RB Choudary: "நான் நிம்மதியாகச் சாப்பிடுறதுக்குக் காரணம், அவர் போட்ட பிச்சை" - கலங்கும் விக்ரமன்

கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிற... மேலும் பார்க்க