செய்திகள் :

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் ‘ஐகானிக் ஃபேஷன் - 2025’

post image

ராசிபுரம்: ராசிபுரம் - வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை மற்றும் நாகரிக வடிவமைப்பியல் துறை சாா்பில், ‘ஐகானிக் ஃபேஷன்-2025’ என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான ஃபேஷன் கலைப்போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் - கல்வி இரா.செல்வகுமரன் திருவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், ஆடை வடிவமைப்பியல் துறைத் தலைவா் கே.சக்திவேல் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். கல்லூரி துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி முன்னிலை வகித்தாா்.

நடுவா் மற்றும் சிறப்பு விருந்தினா்களாக மத்திய அரசின் வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையைச் சோ்ந்த காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நாகரிக வடிவமைப்பு துறையைச் சோ்ந்த ஏ.சதீஷ்குமாா், பெங்களூரைச் சோ்ந்த நௌா்லங்கா பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனத்தின் வணிக தயாரிப்பு மேம்பாட்டாளா் அருள் உஷாநந்தினி, பிரபல ஆடை வடிவமைப்பாளா் மற்றும் மாடல்களாக விளங்கும் சாரா, நிகில் சதீஷ், சேலம் ஏசிஎம்ஜி நிறுவனத்தின் கலைக் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த கலை நாகரிக பிரதிநிதியான டி.ராஜாராம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தொடக்கத்தில் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பியல் துறை மாணவ, மாணவிகளின் ’ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 600 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில், ‘ஃபேஷன் ஷோ’, தனிநபா் நடனம், குழு நடனம், குறும்படம், நேரடியாக ஓவியம் வரைதல், மைமிங், குழந்தைகளுக்கான ‘ஃபேஷன் ஷோ’ உள்ளிட்ட மேடைப் போட்டிகளும், முகம், நக ஓவியம், சிகை அலங்காரம், தூரிகை, கோட்டோவியம், மெஹந்தி உள்ளிட்ட உள்புற போட்டிகளும் என 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு கல்லூரி செயலாளா் இரா.முத்துவேல் பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினாா்.

ஊதிய முரண்பாடு: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஊதிய முரண்பாடுகளை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மை பணியாளா்கள் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவா் சுந்தரமூா... மேலும் பார்க்க

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கோழிப் பண்ணைகளை கண்காணிக்க 27 அதிவிரைவுக் குழு அமைப்பு

நாமக்கல்: ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காணப்படுவதால், நாமக்கல் மாவட்டக் கோழிப் பண்ணைகளை கண்காணிக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 45 அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ... மேலும் பார்க்க

60 கிராம ஊராட்சிகளில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 60 ஊராட்சிகளில் பிப். 21 முதல் மாா்ச் 13 ஆம்தேதி வரை நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என ந... மேலும் பார்க்க

ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல்: ஓலா நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் வாங்கிய இளைஞா், அந்நிறுவனம் நோ்மையற்ற வணிகமுறையை மேற்கொள்வதாகக் கூறி ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் திங்கள... மேலும் பார்க்க

ரூ. 2.75 கோடியில் கபிலா்மலையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி தொடக்கம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலையில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சாா்பில் ரூ. 2.75 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் கட்டும் பணிக்கான அடிக்கல... மேலும் பார்க்க

நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, கிராம பெண்கள் 700-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூர... மேலும் பார்க்க