செய்திகள் :

முன்னாள் அமைச்சர் மூர்த்தி: ``போதைப்பொருள் கடத்தல்கள்; திசைதிருப்பவே ரெய்டுகள்" - ஸ்டாலின்

post image

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான  மதுரை  அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து முதலாவது நீதித்துறை நடுவர் தகவல் அளிக்கப்பட்டு தற்போது மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

இந்த சோதனை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' - அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்டுவது கடினமான இலக்கு என்று அமெரிக... மேலும் பார்க்க

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு ப... மேலும் பார்க்க

"வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மௌனம் காத்தது மனித உரிமை மீறல்" - டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது என்ன?

"ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மூன்று மாதங்கள் மருத்துவமனையும், அரசும் மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கான இரங்கல் செய்தியில... மேலும் பார்க்க

```Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேர... மேலும் பார்க்க

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா?

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான 'தமிழ்நாடு வழிகாட்டி' (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 உயர் அதிகாரிகள், ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் அதிரடியாக... மேலும் பார்க்க

"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். இவரது சகோதரர் கே.முரளீதரன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். பத்மஜா வேணுகோபால் முன்பு கா... மேலும் பார்க்க