செய்திகள் :

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" - மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

post image

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி.

மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவது...

"கடந்த 50 ஆண்டுகளில் வன்முறை மிகக் குறைந்த அளவில் அரங்கேறிய முதல் தேர்தல் இதுவாகும்.

இதற்கு முன்பு, வாரம் ஒருவரைத் அடித்து தூக்கிலிட்டுவிட்டு, அதைத் தற்கொலை என்று சொல்வது வழக்கமாக இருந்தது.

பிரசாரத்தில் மோடி
பிரசாரத்தில் மோடி

பல விதங்களில், சட்டமின்மையும் ரவுடித்தனமுமே மேலோங்கி இருந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வங்க மண்ணில் ஜனநாயகத்தின் கண்ணியத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.

இங்குள்ள அரசு ஊழியர்களையும் நான் பாராட்டுகிறேன். இதுவரை எனக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, வாக்குப்பதிவு விகிதம் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வருகிறது" என்று பேசியுள்ளார்.

நெல்லை: `இரட்டைக் கொலை, கல்குவாரிக்கு எதிர்ப்பு' - தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடந்து வரும்போதிலும், நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப் போட மறுத்து பொதுமக்... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாடு 80% வாக்கு சதவிகிதத்தை தொடுமா? - Tough போட்டி கொடுக்கும் 2021-ம் ஆண்டு தேர்தல்!

இன்னும் சில மணி நேரத்தில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவடைய உள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு, தமி... மேலும் பார்க்க

"இது வாக்குச்சாவடி, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல..!" - வாக்களித்த சிம்ரன் பதிவு

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடக்கிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜகவிற்குச் சாதகமாக போலீஸ்" - "TMC-க்குச் சாதகமாக அடியாட்கள்?" - TMC vs BJP புகார்

இன்று மேற்கு வங்கத்தில் முதல்கட்ட சட்டமன்றத் தேர்தல் நடந்து வருகிறது.2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, நான்காவது முறையாக ஆட்சியைத் ... மேலும் பார்க்க

'நீதி கிடைக்கவில்லை' - தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய வேங்கைவயல் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதி பட்டியலின சமூக மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் எனும் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் இன மக்கள... மேலும் பார்க்க