ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மும்பை பாந்த்ரா பகுதியில் சிவசேனா(ஷிண்டே) சார்பாக ஹாஜி சலீம் குரேஷி போட்டியிடுகிறார். அவர் கட்சி தொண்டர்களோடு சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஹாஜி சலீம் குரேஷியை கத்தியால் குத்தினார். இரண்டு அல்லது மூன்று முறை குத்திவிட்டு கூட்டத்தில் மறைந்துவிட்டார். ஹாஜி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போலீஸார் இது குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதல் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹாஜியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஹாஜி சலீம் இதற்கு முன்பு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் இருந்தார். அவரது மனைவி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
ஆனால் அவர்கள் இரண்டு பேரும் கடந்த ஆண்டு சிவசேனா(ஷிண்டே)வில் சேர்ந்து விட்டனர். இத்தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்பு மனுவை திரும்ப பெற வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுவை திட்டமிட்டு தள்ளுபடி செய்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து. இதனால் 59 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள்னர்.
காங்கிரஸ் நிர்வாகி படுகொலை

மகாராஷ்டிரா காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ஹிதாயத் பட்டேல் மர்ம நபரால் மசூதிக்கு வெளியில் கத்தியால் குத்தப்பட்டார். அகோலா மாவட்டத்தில் உள்ள மொஹலா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பட்டேல் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. பட்டேல் இறுதிச்சடங்கில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று வேட்புமனுவை திரும்ப பெறுவது தொடர்பான தகராறில் சோலாப்பூரில் நவநிர்மாண் சேனா மாணவரணி தலைவர் பாலாசாஹேப் படுகொலை குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் உட்பட 5 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


















