செய்திகள் :

மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?

post image

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார்.

அப்போது வீட்டிற்கு வெளியில் நின்ற தெருநாய் ஒன்றுக்கு சிறுமி பிஸ்கெட் கொடுத்தார். அந்நேரம் சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவளது தாத்தா டாக்டரிடம் அழைத்துச்சென்றார். ஆனால் ஊசி போட்டுக்கொள்ள பயந்து அச்சிறுமி ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

அதன்பிறகு நாய் கடித்த புண் ஆறிவிட்டது. அதன் பிறகு அவர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமியின் நிலை திடீரென மோசமடைந்தது. அவரது கண்கள் சிவப்பானது. உடனே சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நாய்
நாய்

அவரை அங்கிருந்து மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாக இருந்ததால் நாய்கடிக்கு சிறுமி இறக்க நேரிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அச்சிறுமி வசித்த பகுதிக்குச் சென்று அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ''ரேபிஸ் தடுக்கக்கூடியது, ஆனால் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அதன்பிறகு மிகவும் ஆபத்தானது. ரேபிஸ் என்பது நாய்க்கடி மூலம் உருவாகும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் வழியாகப் பரவுகிறது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை இது பாதிக்கிறது. சாதாரணமாக நாய் கடித்தாலோ அல்லது லேசாக அதன் நகத்தால் அல்லது பற்களால் மனிதர்கள் உடம்பில் கீரல் போட்டாலோ உடனே தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்'' என்று தெரிவித்துள்ளனர்.

Doctor Vikatan: உடல் எடையை அதிகரிக்கச் செய்யுமா அவல் உணவுகள்?

Doctor Vikatan: தொடர்ச்சியாக அவல் உணவுகளைச் சாப்பிட்டு பல கிலோ எடை குறைத்ததாக சோஷியல் மீடியாவில் ஒரு பிரபலம் தகவல் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்து நானும் பின்பற்றினேன். எனக்கு எடையும் குறையவில்லை, ர... மேலும் பார்க்க

பாதமே நலமா - சீசன் 2: நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு; பாதநல விழிப்புணர்வு கருத்தரங்கம் அம்பத்தூரில்!

கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய க்ளிக் செய்க... https://tinyurl.com/4jcvm4vn"சின்னப் புண்ணுதானே... தானா ஆறிடும்" என்று நாம் காட்டும் ஒரு சிறு அலட்சியம், சில நேரங்களில் ஒரு விரலையோ அல்லது பாதத்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?

Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா?பதில் சொல்கிறார் ... மேலும் பார்க்க

சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் 'எம்.வி.கான் 2026' (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில், ஆயுர்வேதம... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கமின்மையால் சருமம் அதிக வறட்சியாக மாறுமா?

Doctor Vikatan: எனக்கு மாதத்தில் அதிகபட்சமாக பத்து நாள்கள்தான் சருமம் நன்றாக இருக்கிறது. மற்ற நாள்களில் அதிக வறட்சி அல்லது பருக்கள் அல்லது பொலிவே இல்லாதது என எனக்கே என் சருமத்தைப் பார்க்கப் பிடிக்கவில... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெயிட்லாஸ்... அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சமூக ஊடங்களில் உடல் எடையைக் குறைக்கும் வெயிட்லாஸ் மாத்திரைகள், மருந்துகள் பற்றிய செய்திகளை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் என்று... மேலும் பார்க்க