செய்திகள் :

மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்து; சரத்பவார் மகள் சுப்ரியாவைக் காப்பாற்றிய சீட்பெல்ட்

post image

முன்னாள் மத்திய அமைச்சர் மகளும், பாராமதி தொகுதி எம்.பி.யுமான சுப்ரியா சுலே புனேயில் இருந்து மும்பைக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

புனே-மும்பை நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது அதே வழித்தடத்தில் வந்த மற்றொரு கார் சுப்ரியா சென்ற காரை வேகமாக உரசிச்சென்றது. இதனால் சுப்ரியாவின் கார் நிலைதடுமாறியது.

அதிர்ஷ்டவசமாக இதில் சுப்ரியா சுலே காயம் இன்றி தப்பினார். அவர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் தன்னால் இந்த விபத்தில் காயம் இன்றி தப்பிக்க முடிந்தது என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுப்ரியா சுலே இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், ''நான் புனேவிலிருந்து மும்பைக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வந்த ஒரு கார் என் காரின் மீது மோதியது.

தயவுசெய்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள். பயணம் செய்யும் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருங்கள்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

இது நீங்கள் எப்படி வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதைப் பற்றியது அல்ல. எதிரே வரும் ஒரு ஓட்டுநரின் கவனக்குறைவால் கூட விபத்து ஏற்படலாம். நல்லவேளையாக, நான் சீட்பெல்ட் அணிந்திருந்தேன். நாங்கள் அனைவரும் முழுமையாகப் காயம் இன்றி தப்பித்தோம்.

ஆனால், அந்த கார் பக்கவாட்டிலிருந்து வந்து என் காரின் மீது மோதிய அந்த ஒரு நிமிடம் மட்டும் எனக்குச் சற்று அச்சமாக இருந்தது. சாலைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்," என்று குறிப்பிட்டிருந்தார்.

தனது கார் மீது மோதிய கார் நம்பரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு விபத்தை ஏற்படுத்திய காரை மடக்கினர்.

அதில் இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். காரில் பயணம் செய்தவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுற்றுலா சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தனர்.

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கட்டிடத்தின் 2வது மாடியில் பற்ற... மேலும் பார்க்க

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே ந... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க