செய்திகள் :

மும்பை: பூட்டிய வீட்டில் துர்நாற்றம்; மூட்டையில் காதலனின் சடலம்; தலைமறைவான காதலியின் கொடூர செயல்

post image

சமீபத்தில் புனேயில் ஷியா அகர்வால் என்ற பெண் தனது வருங்கால கணவனை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொலை செய்தார். தற்போது மும்பையில் மேலும் ஒரு பெண் தனது காதலனைக் கொலை செய்து உடலை வீட்டின் குளியல் அறையில் அடைத்துவைத்துவிட்டு சென்றுள்ளார்.

மும்பை அருகில் உள்ள கல்யான் நீல்காந்த் சொசைட்டியில் நேகா என்ற பெண் தனது காதலனுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். ஆனால் அவர்கள் தங்கி இருந்த வீடு கடந்த சில நாள்களாகப் பூட்டப்பட்டு இருந்தது.

அதோடு அந்த வீட்டிலிருந்து கெட்ட வாசனை வந்து கொண்டிருந்தது. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இந்நிலையில் நேகா தங்கி இருந்த வீட்டு உரிமையாளருக்கு இதுதொடர்பாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதில் உங்கள் வீட்டு குளியல் அறையில் ஒருவரின் இறந்த உடல் இருப்பதாகவும், அதில் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

உடனே இது குறித்து வீட்டு உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து அந்த வீட்டின் கதவைத் திறந்தனர். வீட்டின் உள்ளே குளியல் அறையில் சாக்கு மூட்டையில் உடல் கட்டப்பட்டு அது டிரம் ஒன்றில் வைக்கப்பட்டு அதன் மீது தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. உடல் உறுப்புகள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. அதனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் விரைவில் அழுக வேண்டும் என்று கருதி தொடர்ந்து தண்ணீர் விழும்படி செய்து இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையே என்ன பிரச்னையில் இக்கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்த பெண் கொல்கத்தாவிற்குத் தப்பிச்சென்றுவிட்டார். அவரைக் கைது செய்ய தனிப்படை போலீஸார் கொல்கத்தாவிற்கு விரைந்துள்ளனர்.

சென்னை: `தனிமையில் இருக்கலாம்' - ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆசை காட்டி பணம் பறித்த கும்பல்

சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றம்) (53). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் பிரத்கேய செல்போன் செயலி மூலம் சுதாகர் என்பவர் தொடர்... மேலும் பார்க்க

பெங்களூரு: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த டெலிவரி பாய்; தனியாக இருந்த பெண்ணிடம் அநாகரிகச் செயல்

பெங்களூரு மாரத்தஹள்ளியில் கழிவறையைப் பயன்படுத்துவதாகக் கூறி ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தனது அந்தரங்க உறுப்பைத் தனியாக இருந்த பெண்ணிடம் காட்டிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தற்போது அதுபோ... மேலும் பார்க்க

கூடங்குள அணுமின் நிலைய சைபர் தாக்குதல் : அபாயப் பின்னணிகள் – அளிக்கும் பாடங்கள்!

நிகழ்ந்தது தரவுத்திருட்டு மற்றும் ஆவணக் கசிவு (மட்டுமே)கூடங்குளம் அணு மின் நிலையத்தின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடைபெற்ற தகவல் வெளியானது.(சைபர் தாக்குதல் என்பதை கணினி அமைப்புகள், தகவல் தொடர்பு ... மேலும் பார்க்க

சேலம்: மூக்குத்தி, கம்மலுக்காக வீடுபுகுந்து தம்பதி அடித்துக் கொலை - அச்சத்தில் மக்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ள ராமப்ப கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதி. மூத்த குடிமக்களான‌ இருவரும் தென்னை மட்டை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு இரவு ... மேலும் பார்க்க

மார்கண்டேயனை படம் பிடிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் - நாக்கை துருத்தி மிரட்டல் விடுத்த ஏடிஎஸ்பி!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், “எலும்பை உடைத்து விடுவேன்” என முதல்வர் விஜய்யை பார்த்து கொலை மிரட்டல் வி... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் திருட்டு - வனத்துறை குடோனில் மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் வனக்கோட்டத்துக்குச் சொந்தமான சந்தன மற்றும் செம்மரக் கட்டைகள் விற்பனைக் கிடங்கு, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ளது. இங்கு ஜவ்வாது மலையில் விளையும் உயர்தர சந்தன மரங்கள் மற்... மேலும் பார்க்க