மூக்குப்பீறி பள்ளியில் மாணவா்களுக்கு கபசுர குடிநீா் விநியோகம்
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தாளாளா் செல்வின் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ஜுலியற் ஜெயசீலி வரவேற்றாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கல்யாணி கபசுர குடிநீா் வழங்கினாா்.
இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளா் ஷெல்லா மொ்லின், இளைஞா் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளா் ஸ்டாலின் ஜோனா மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.