செய்திகள் :

மூடிய வந்தே பாரத் ரயிலின் தானியங்கி கதவுகள் - `BYE' சொல்லப் போய் ₹36,000 ஃபைன் கட்டிய கதை!

post image

உத்தரப்பிரதேசத்தில் உறவினர்களை ரயிலில் ஏற்றி வழியனுப்பச் சென்ற 12 பேர், வந்தே பாரத் ரயிலில் சுமார் 140 கி.மீ பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், ₹36,000 அபராதமும் செலுத்தியுள்ளனர்.

வாரணாசி – புதுடெல்லி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றபோது, தங்களது உறவினர்களை வழியனுப்புவதற்காக 12 பேர் ரயிலில் ஏறியுள்ளனர். அவர்களுக்கு இருக்கைகளைச் சரிசெய்து, உடைமைகளை வைக்க உதவியுள்ளனர்.

இதற்கிடையில் ரயிலின் தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டது ரயில் நகரும்போது பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தானியங்கிக் கதவுகளை உடனடியாகத் திறக்க முடியவில்லை. அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ரயிலும் புறப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ரயில்வே அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளனர்.

இதையடுத்து, ரயில் எட்டாவா (Etawah) சந்திப்பில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயில்வே அதிகாரிகள் 12 பேரையும் பாதுகாப்பாகக் கீழே இறக்கினர்.

பின்னர், முறையான பயணச்சீட்டு அல்லது நடைமேடைச் சீட்டு இல்லாமல் ரயிலில் ஏறியதற்காக ஒவ்வொருவருக்கும் ₹3,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் ₹36,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

உறவினர்களை வழியனுப்பச் சென்றவர்கள், எதிர்பாராத விதமாக 140 கி.மீ பயணம் செய்து அபராதமும் செலுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பிரார்த்தனை கூடமா, மசூதியா? - தாவூத் குடும்பம் வசித்த கட்டடத்தை அடியோடு இடிக்கும் மும்பை மாநகராட்சி

மும்பையில் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்து வந்த தாவூத் இப்ராகிம் 1986ம் ஆண்டு மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றான். மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு தாவூத் இப்ராகிம் ... மேலும் பார்க்க

`ரூ.15 கோடி தொழில் வேண்டாம்' - மனைவி, மகள்களுடன் ஜெயின் மத துறவியாகும் சூரத் தொழிலதிபர்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் திடீரென ஜெயின் மத சன்னியாசிகளாக மாறிவிடுவதுண்டு. சில நேரங்களில் சிறுமிகள் கூட ஜெயின் மத துறவியாகிவிடுவதுண்டு. புதிதாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ... மேலும் பார்க்க

15 ஆண்டுக்கால காத்திருப்பு... ஒரே லாட்டரியில் ரூ.12 கோடி - பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

தினமும் உழைப்பு... விவசாயம்... அவ்வப்போது ஒரு லாட்டரி சீட்டு என வாழ்க்கையை நகர்த்திவந்த விவசாயிக்கு, ஒரே நாளில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்த அவரது காத்திருப்புக்... மேலும் பார்க்க

மும்பை: மனைவியை அமர வைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் மும்பை வந்துள்ளார். இளவரசர் வில்லியம், வருடாந்திர சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தன் மனைவியுடன் நேற்று மும்பை வந்தார். ந... மேலும் பார்க்க

லாரான்ஸ் கேங் அச்சுறுத்தல்; கமாண்டோ உதவியுடன் பலப்படுத்தப்பட்ட அமிதாப், சல்மான் பாதுகாப்பு!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது சமீபத்தில் மும்பையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஆனால் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் பி... மேலும் பார்க்க