செய்திகள் :

மூன்று கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ரூ.5 கோடி நகைகள் கொள்ளை! - கத்தி முனையில் சிக்கிய வியாபாரி

post image

விழுப்புரம் வீராட்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், மொத்த தங்க நகை வியாபாரி. சென்னையில் மொத்தமாக தங்கம் வாங்கி, அதை கம்மல், ஜிமிக்கி, செயின் போன்ற ஆபரணங்களாக செய்து கடைகளுக்கு விற்பது இவரது வழக்கம். சுமார் பத்து ஆண்டுகளாக இந்த தொழில் செய்து வரும் ராஜமாணிக்கம், அதற்காக தன்னுடைய வீட்டிலேயே தங்க நகை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார்.

நகை வியாபாரி ராஜமாணிக்கம்

சமீபத்தில் மூன்று கிலோ தங்கத்தில் ஆபரணங்களை செய்த ராஜமாணிக்கம், அவற்றை சென்னையில் இருக்கும் நகைக் கடைகளுக்கு விநியோகிக்க முடிவெடுத்தார். அதற்காக நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் தன் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து கொண்டு அவரை பின் தொடர்ந்து சென்ற ஒன்பது பேர் கொண்ட கும்பல், கோட்டைவி நாயகர் கோயிலுக்கு அருகில் வழிமறித்து நிறுத்தினார்கள்.

அதே வேகத்தில் கத்தியை கட்டிய அந்தக் கும்பல், ராஜமாணிக்கம் நகைகள் வைத்திருந்த பையை கேட்டது. முதலில் அவர் மறுக்கவே, கத்தியால் அவரது கழுத்தை குத்த முயற்சித்திருக்கிறது அந்தக் கும்பல். அதில் பயந்துபோன ராஜமாணிக்கம், தங்க நகைகள் வைத்திருந்த பையை அவர்களிடம் கொடுத்திருக்கிறார். அதையடுத்த சில விநாடிகளில் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு தெரிவித்தனர்.

தங்க நகைகள் | கோப்புப் படம்

அதனடிப்படையில் உடனே அங்கு விரைந்த போலீஸார், ராஜமாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளைக் கைப்பற்றியதுடன், எல்லைப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். அதேபோல குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஏ.எஸ்.பி ரவீந்திரகுமார் குப்தா தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கின்றனர் தங்க நகை வியாபாரிகள்.

கோவை: ஹோட்டல் உரிமையாளர் கொலை; ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்; அதிர்ச்சி பின்னணி என்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீபன். இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே ஹோட்டல் நடத்தி வந்தார். இவரது ஹோட்டலில் அன்பு எஸ்தர் என்பவர் பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் எ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; "அவர் ஒரு சூப்பர் ஸ்டார்" - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?

நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவ... மேலும் பார்க்க

முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை

கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங... மேலும் பார்க்க

திருத்தணி பேருந்து நிலையம்: `அண்ணா - கலைஞர்' மாற்றும் திமுக; அமைதி அதிமுக; டைப்பிங் மிஸ்டேக் நாதக!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இடநெருக்கடி காரணமாக திருத்தணி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதி... மேலும் பார்க்க

சென்னை: விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தி.மு.க கவுன்சிலர், அ.தி.மு.க பிரமுகர் கைதான பின்னணி!

சென்னையில் குடியிருக்கும் 25 வயதான இளம்பெண், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி இவர், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் பணியிலிருந்தபோது திருவள்ளூரைச் சேர்ந்த பிரபாகர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `மது குடிக்க பணம் தரவில்லை; அதனால்...'- தாயை அரிவாள்மனையால் தாக்கி கொன்ற மகன்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறுவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு சுமதி என்ற மகளும், வேலுச்சாமி என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணியனின் சொந்த ஊர், தென்காசி மாவட்டம் கண்ணாடி... மேலும் பார்க்க