செய்திகள் :

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

post image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இருவருக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஆளுங்கட்சி என்ற முறையில் தவெகவிற்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி தான் சட்டமன்றம் இருக்கும் என்றால் சட்டமன்றமே வேண்டாம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சட்டமன்றம் மக்களின் வரிப்பணத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களுடைய சொந்தப் பணத்தில் நடக்கவில்லை. சட்டமன்றத்தில் முறையாக நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

சட்டமன்றம்
சட்டமன்றம்

வீணான விவாதங்களில் சட்டமன்றத்தின் நேரங்கள் விரையமாவதை நாங்கள் எதிர்க்கிறோம். அப்படி நேரம் விரையமாகக்கூடாது என்ற நோக்கில் ஆளுங்கட்சி நடந்துகொள்ள வேண்டும்.

ஊழல் விஷயத்தில் எங்களை விட எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்ப்போம். காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் பதில் சொன்னாரா? அவர் பேசுவதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது.

ஆனால் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முறையாக பதில் சொல்லவில்லை. இப்படி எப்போதும் நடந்தது கிடையாது. தவெக அமைச்சருக்கு நான் பணிவாக தெரிவித்துகொள்வது என்னவென்றால் முதலில் நீங்கள் படியுங்கள்.

மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் சமூக விரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் சொல்வதெல்லாம் சிறுபிள்ளை தனம். அறியாமையில் இருந்து வெளிவரக்கூடிய கருத்து.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

மிசா தொடர்பாக நிறைய ஆவணங்கள் இருக்கிறது அதை முதலில் படியுங்கள். சர்க்காரியா கமிஷனில் யாரும் கைது செய்யப்படவில்லை. மூன்று கோப்புகள் கையில் இருப்பதாக முதல்வர் சொன்னார். ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே இல்லாமல் சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார். திசை திருப்பும் தந்திரம் இது" என்று தவெகவை சாடியிருக்கிறார்.

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க

'சாப்பாட்டுல உப்பை குறைங்க!' - சட்டமன்றத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ்

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 'உப்புக் குறைப்பு' என ஒரு முக்கியமான திட்டத்தை அறிவித்திருந்தார்.அமைச்சர் அருண்... மேலும் பார்க்க

``தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்துக்கு போகமாட்டோம்; எந்தக் கூட்டணியிலும் இல்லை" - CPIM கே.பாலகிருஷ்ணன்

சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெ... மேலும் பார்க்க

'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?அவைக் காவலர்கள்அவை எப்போதுமே சுமூகம... மேலும் பார்க்க

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன்,... மேலும் பார்க்க

ஒன்றரை மணி கெடு; குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக MLAக்கள்!-சபாநாயகரின் கோபத்துக்கு காரணம் என்ன?

சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இந்நிலையில் அவை தொடங்கிய 45 நிமிடத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏக்களை அவைக்காவலர்களை அழைத்து குண்டுக்கட்டாக வெள... மேலும் பார்க்க