செய்திகள் :

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

post image

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா.

சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரிடம் உரையாடினோம்.

Vishwa - Samanthi
Vishwa - Samanthi

"நான் தற்காலிகமாக மீடியாவை விட்டு விலகி இருந்தது எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட காரணத்தினாலும் அல்ல. அது பல நிகழ்வுகளின் தொகுப்புதான். ஆனால் ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், 'நான் என்றைக்குமே சீரியலுக்கு எதிரானவன் அல்ல'.

ஒரு சின்ன மாற்றத்திற்காகவே சில காலம் விலகி இருக்க முடிவு செய்தேன். அந்தக் கொரோனா லாக்டவுன் சமயத்தில்தான் மீண்டும் நடிக்க வரலாம் என்ற எண்ணம் எனக்குள் வந்தது.

வழக்கமாக 'ஒருமுறை மீடியாவுக்குள் வந்துவிட்டால், நாம் எப்போதும் அங்கேயே இருக்கத்தான் தோன்றும்' என்பார்கள். நானும் என்றைக்குமே கேமராவைவிட்டு ஒதுங்கியதில்லை. இந்த இடைவேளைக் காலம் என்னுடைய நடிப்புத் திறனை மெருகேற்ற எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.

இன்றைய அடுத்த தலைமுறைப் பிள்ளைகளும் 'மெட்டி ஒலி' சீரியலையும் அதன் பாடலையும் ரசிப்பதைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமிதமாக இருக்கிறது. சொல்லப்போனால், அதுவே நான் மீண்டும் திரைக்கு வருவதற்கான முக்கிய உந்துதலாகவும் இருந்தது.

இப்போது அந்த சீரியலுக்கு ரிப்பீட் வேல்யூ இருக்கிறது. 'மெட்டி ஒலி 2' பற்றிய பேச்சுகள் நடந்தபோது நான் ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இப்போதும் அதுபற்றிய பேச்சுகள் இருக்கின்றன. கூடிய விரைவில் அது நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பத்து வருடங்களுக்கு முன்பு 'பொன்னுஞ்சல்' சீரியலில் இருந்துதான் நான் பிரேக் எடுத்தேன். அந்த சீரியலில் என்னுடன் ஷமிதா நடித்திருந்தார். தற்போது நான் கம்பேக் கொடுத்திருக்கும் இந்த சீரியலிலும் ஷமிதாதான் என்னுடன் நடிக்கிறார்" என்றார்.

Vishwa - Samanthi
Vishwa - Samanthi

மேலும், சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கிறார். அதுபற்றி, "இப்போது என்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் மக்களுடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன்.

அதில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் காட்டுவதை விட, சமூக அக்கறை கொண்ட அல்லது ஆழமான கருத்துகளை வழங்கவே நான் விரும்புகிறேன். வருமானத்தைத் தாண்டி அந்த சேனலில் நான் நல்ல கண்டெண்ட் கொடுத்துவிட வேண்டும் என்றே விரும்புவேன்" எனப் பகிர்ந்துகொண்டார்.

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க

`டி.ஆர்.பி ரேட்டிங் இனி கிடையாதா?' - சீரியல் ஆடியன்ஸ் கணக்கீட்டில் என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

டி.ஆர்.பி ரேட்டிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டிவியில் எந்த சீரியலை அதிகம் பேர் பார்க்கின்றனர், எந்த மொழியில் எந்த சேனலை அதிக மக்கள் பார்க்கின்றனர் என்பன போன்ற விபரங்களைத் தரும் டெலிவிஷன் ரேட்டிங் பா... மேலும் பார்க்க

Sreekumar: "ட்ரோல்ஸ் விஷயங்களுக்கு நான் என் ஹஸ்பண்ட்கிட்ட சொல்றது..." - ஷமிதா ஷேரிங்ஸ்

சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்த... மேலும் பார்க்க