செய்திகள் :

அன்று கடும் கண்டனம், இன்று மெளனம்! - லாக்கப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது CM சார்?

post image

திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் அடைந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்... இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும்... இது 2025-ம் ஆண்டு தவெக தலைவராக இருந்த தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை.

75 நாட்கள்... 4 லாக்கப் மரணங்கள்

'ஜோசப் விஜய் ஆகிய நான்' என்று விஜய் பொறுப்பேற்று 75 நாள்கள் ஆகியிருக்கிறது. இந்த 75 நாள்களில் தமிழ்நாட்டில் நடந்திருப்பது நான்கு லாக்கப் மரணங்கள்.

லாக்கப் டெத்...
லாக்கப் டெத்...

மாற்றுத்திறனாளி மரணம்

கடந்த 13-ம் தேதி நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் மரணம் மாநிலத்தையே உலுக்கியது.

அவரது உடற்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 19 காயங்களும், வெளியான சிசிடிவி ஆதாரங்களும் காவல்துறையினரின் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்தின.

இந்த அதிர்ச்சி தமிழ்நாட்டில் ஓய்ந்துபோகாத நிலையில் ஜூலை.23 தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24). காவல்துறையினர் தாக்கியதில் தலையில் காயம் அடைந்து உயிரிழந்திருக்கிறார்.

வாய் திறக்காத முதல்வர்!

இடையில், ஜூலை 15-ம் தேதி, புழல் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த பி. பாலாஜி என்ற 45 வயது கைதி உயிரிழந்திருக்கிறார். கடந்த மாதம் 8-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த 28 வயதான ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் காவல்துறையின் சித்திரவதையால் உயிரிழந்திருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, லாக்கப் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பி வந்த விஜய், தன்னுடைய ஆட்சியில் இதுவரை நடந்துள்ள நான்கு லாக்கப் மரணங்களுக்கு வாயைத் திறக்கவில்லை.

லாக்கப் மரணங்கள்

திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணத்திற்கு!

'எங்கள் ஆட்சி அமைந்தால் காவல் நிலைய அத்துமீறல்கள் அறவே இருக்காது. காவல்துறை சீர்த்திருத்தப்படும்' என்று அப்போது பொங்கியவரின் கையில் தான் இன்று காவல் துறை இருக்கிறது. ஒருவேளை, இதை மறந்தவிட்டாரோ என்னவோ, அப்படி மறந்திருந்தால், இந்தக் கட்டுரையின் மூலம் ஒரு நினைவூட்டல்.

திமுக ஆட்சியில் நடந்த ஒவ்வொரு லாக்கப் மரணமும் எப்படி தவறானதோ, நடந்திருக்கக் கூடாதோ, அதே அளவிற்கான தவறு தான் தற்போது நடந்திருக்கும் நான்கு லாக்கப் மரணங்களும்.

தவெக தலைவராக இருந்தப்போது விஜய் 'செலக்டிவான' விஷயங்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தார். அப்படி அவர் கடைக்கண் பார்வையில் விழுந்த முக்கியமான ஒன்று இந்த அவலம்.

மௌனம் சாதிப்பது...

அப்படியிருக்கையில், தன்னுடைய ஆட்சியில் இந்த அவலம் நடந்துவிடக் கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருந்திருக்க வேண்டும் இன்றைய முதல்வர். முதலாவது லாக்கப் மரணமே நடந்திருக்கக்கூடாது.

ஆனால், இப்போது நான்கு லாக்கப் மரணங்கள் நடந்திருக்கிறது. இதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பனையூர் கதவை அறிக்கையாவது தாண்டியிருக்க வேண்டும்.

ஒரு லாக்கப் மரணத்திற்கு ஃபோனில் 'சாரி' சொல்வது எவ்வளவு தவறோ, அதை விட கொடூரம் மௌனம் சாதிப்பது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

லாக்கப் மரணங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திய அப்போதைய தவெக நிர்வாகிகள்... இப்போதைய தவெக அமைச்சர்கள். அடுத்த ஒரு லாக்கப் மரணம் தமிழ்நாட்டில் நடந்திடாமல் இருக்க நீங்களும், உங்கள் தலைவரும் என்ன யோசனையை முன்னெடுத்திருக்கிறீர்கள்?

மாற்றம்?

லாக்கப் மரணம் குறித்து விசாரணை, கீழ்மட்ட அதிகாரிகளின் தற்காலிக இடமாற்றங்கள்... என்ற அதே வழக்கமான... பழைய நடவடிக்கைகளைக் கையிலெடுக்காதீர்கள் முதல்வரே. நீங்கள் எங்களுக்கு சொன்னதும்... நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் ஒன்று தான். அது 'மாற்றம்'. அந்த மாற்றம் நீங்கள் லாக்கப் மரணங்களைக் கையாள்வதிலும் எதிர்பார்க்கிறோம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதிகாரத்தின் நிழலில் நடக்கும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே ஒரு தலைவரின் உண்மையான நிர்வாகத் திறனுக்குச் சான்று. தேர்தல் மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளித் தருவது எளிது. ஆனால், அதிகார பீடத்தில் அமர்ந்த பின் அதைச் செயல்பாட்டில் நிரூபிப்பதே மிக முக்கியம்.

நீங்கள் கொண்ட வரப்போகும் மாற்றத்தையும், செயல்பாட்டையும் எதிர்நோக்குகிறோம் CM விஜய் சார்!

`ஒருவருக்கு பின்னால் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடுவது விந்தையாக இருக்கிறது'- குடியரசு துணை தலைவர்

குடியரசு துணை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ராதாகிருஷ்ணன் ம... மேலும் பார்க்க

ஈரோடு: கொரில்லா, ஓநாய் வேடத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு; காவல்துறை நூதனப் பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில் ஹெல்மெட் விழிப்புணர்வுஈரோட்டில... மேலும் பார்க்க

VB-GRAM (G) திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க புதிய நடைமுறைகள்; ஊரக வளர்ச்சித் துறை உத்தரவு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் VB-GRAM (G) Scheme 2025 திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்டுள... மேலும் பார்க்க

`இந்தியாவிலேயே ஒரே முதல்வர் இவர்தான்!'- சூப்பர் எல் நினோ குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொல்வதென்ன?

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து கூறியிருக்கிறார். சூப்பர் ... மேலும் பார்க்க

`அல்லேரிக்கு விரைவில் சாலை வசதி’ - ஜூ.வி., ஆக்‌ஷன் ஸ்டோரி... மலைவாழ் மக்களிடம் ஆட்சியர் உறுதி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம் `அல்லேரி’. ஜவ்வாது மலைத்தொடரின் ஒரு பகுதியான அல்லேரிக்குச் செல்ல வேண்டுமானால், அடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான காட... மேலும் பார்க்க