செய்திகள் :

மேகதாது: ``போராடிப் பெற்ற தீர்ப்பைக்கூட இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை" - எடப்பாடி பழனிசாமி

post image

தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ``தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன். காவிரி நதிநீர் பிரச்னை மற்றும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றே தெரியவில்லை.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய பிரதிநிதிகளை அழைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று அதிமுக சார்பிலும், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மூத்த சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து இதற்கொரு தீர்வு காண வேண்டும் என்று ஊடகங்கள் மூலமாகவும் அறிக்கைகள் மூலமாகவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், இந்த அரசு அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை.

அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கின்றது. முன்பு அ.தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.க ஆட்சியாக இருந்தாலும் சரி, காவிரி அல்லது மேகதாது பிரச்னை வரும்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண்பார்கள்.

அ.தி.மு.க ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்னையில் போராடிப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக்கூட, இந்த அரசால் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு அங்குள்ள அரசியல் கட்சிகளையும் விவசாயிகளையும் மதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காவிரி விவகாரத்தின் வரலாறு தெரியாத ஒரு ஆட்சியாகவே இது செயல்படுகிறது." என்றார்.

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க