செய்திகள் :

``மேகவெடிப்பு அதிகரிக்கலாம்... திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" - அன்புமணி சொல்வது என்ன?

post image

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது.

சென்னை மழை

சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும், மீனம்பாக்கம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருப்பது எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை.

காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றை ய மழைப்பொழிவு அமைந்துள்ளது. நடப்பாண்டில் எல் -நினோ தாக்கமும் இருப்பதால் நிலைமை மோசமடையும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

Rain Alert - மழை
Rain Alert - மழை

சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் நேற்று பெய்ததை விட இன்னும் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்ப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதை மனதில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 43 மாதங்களாகியும் அந்த அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை.

அன்புமணி
அன்புமணி

திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த 161 பரிந்துரைகள் என்னென்ன? செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகள் என்னவென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது.

இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும்."

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Chennai Rain: 'தவெக ரொம்ப ஸ்லோ; திமுக செஞ்ச வேலையினாலதான் தண்ணி நிக்கலை!' - மேயர் பிரியா!

நேற்று மாலை முதல் சென்னையில் மிகக் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி அதிகாரிகளும் பணியாளர்களும் களத்தில் சுற்றி சுழன்று வேலை பார்த்து மழை வெள்ளத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் விஜய்யும... மேலும் பார்க்க

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர... மேலும் பார்க்க

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார். CM Vijayசென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை... மேலும் பார்க்க

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ... மேலும் பார்க்க

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. உச்சக்கட்டமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பெய்திருக்கிறது. பல இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை அகற்றும் பண... மேலும் பார்க்க

``இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் மழைநீர்; ஆவணங்கள் பாதுகாப்பு என்ன ஆவது?" - சேகர் பாபு கேள்வி

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க