செய்திகள் :

மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! - அமைச்சர் சொல்வதென்ன?

post image

மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது.

இது தொடர்பாக மேகாலயா சட்டப்பேரவையில் பேசியிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா, "2026 ஜனவரி 26 கணக்குப்படி மேகாலயாவில் 10,293 நபர்கள் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ஹெச்.ஐ.வி
ஹெச்.ஐ.வி

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் 749 இறந்துள்ளனர். மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது அதிகபட்சமாக கிழக்கு காசி மலை பகுதியில் 435 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

மேகாலயாவில் ஹெச்.ஐ.வி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன.

ஹெச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. ஹெச்.ஐ.வி பாதிப்பு குறித்து விவாதிக்க பிரத்யேக சட்டமன்ற மன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா
சுகாதாரத்துறை அமைச்சர் டபிள்யூ. ஷில்லா

ஹெச்.ஐ.வி என்பது இனி மரணத்தண்டனை அல்ல. முறையான சிகிச்சை மூலம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்" என்று கூறியிருக்கிறார்.

Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மரு... மேலும் பார்க்க

Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!

வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவே... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோயா உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி அதிகரிக்குமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் அடிக்கடி சோயா உணவுகள் சமைப்பது வழக்கம்.சோயா சங்க்ஸ் சேர்த்த பிரியாணி, கிரேவி, சோயா சுண்டல் என ஏதேனும் ஒன்று இருக்கும். ஆண் குழந்தைகளுக்கு சோயா உணவுகள் கொடுத்தால், அவர்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூளைச்சாவு என்பது என்ன? மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் தானம் செய்யலாமா?

Doctor Vikatan: விபத்தில் மூளைச் சாவு அடைந்தவர் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதென்ன மூளைச்சாவு.... மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுவது என்ன?- மல்லிகா அன்ப... மேலும் பார்க்க

வேலைப்பளுவும் ஸ்ட்ரெஸ்ஸும் அதிகமானதால் கேன்சர்... உண்மைச் சம்பவமும் மருத்துவ எச்சரிக்கையும்!

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவருக்கு நான்காம் நிலை புற்றுநோய் (Stage 4 Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுமுறை, காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சி என ஹெல்த்தி லைஃப்ஸ்டைலைப் பின... மேலும் பார்க்க

Doctor Vikatan: இடது காலில் வலி மற்றும் பலவீனம்... இதய நோய் இருக்கலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan:எனக்கு கடந்த சில வருடங்களாக இடது காலில் பலவீனத்தை உணர்கிறேன். நடக்கும்போது, நிற்கும்போதெல்லாம் இடது காலில் பலமே இல்லாததுபோல இருக்கிறது. இடது காலில் பிரச்னை என்றால் அது இதயத்துடன் தொடர்ப... மேலும் பார்க்க