செய்திகள் :

மே வங்கம்: `திரிணாமுல் தலைவர்கள்மீது முட்டை வீச வேண்டுமென்பது அரசு உத்தரவு'- பாஜக கவுன்சிலர் சர்ச்சை

post image

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு அக்கட்சியின் தலைவர்கள் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாகி வந்தனர். அவர்கள் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் முட்டை மற்றும் தக்காளிகளை கொண்டு வீச ஆரம்பித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது மக்களுக்கு இவ்வளவு நாள்களும் இருந்த கோபம் வெளிப்படுவதாக மாநில பா.ஜ.க முதல்வர் சுவேந்து அதிகாரி குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவரின் கருத்துக்கு நேர் மாறாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது முட்டை வீசச் சொன்னதே அரசுதான் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மிட்னாபூரில் பாஜக பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மூத்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது முட்டைகளைத் வீசிவிட்டு, இது அரசு உத்தரவு என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், பொதுப்பணித்துறையைக் கவனித்து வந்த 70 வயதைக் கடந்த முன்னாள் திரிணாமுல் பஞ்சாயத்து உறுப்பினரான மனாஸ் தாஸை, ராம்நகர் II தொகுதி பாஜக பஞ்சாயத்து எதிர்க்கட்சித் தலைவரான சுப்ரதா ஜனா முட்டைகளால் தாக்கினார்.

தாக்குதலுக்கு உள்ளான அபிஷேக் பானர்ஜி

ஒரு முதியவரை ஏன் தாக்குகிறீர்கள் என்று உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பியபோது, தனது செயல்கள் அனைத்தும் சர்க்கார் (அரசாங்க) உத்தரவின் கீழ் தான் செய்யப்படுகின்றன என்றும், தானே இதற்குப் பொறுப்பாளர் என்றும் ஜனா மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறினார். இக்கருத்து பெரிய அளவில் வைரலானவுடன், தான் மாநில அரசைக் குறிப்பிடவில்லை என்று சுப்ரதா ஜனா மறுத்தார். சர்க்கார் என்ற பெங்காலி வார்த்தைக்கு மந்திரவாதி பி.சி.சர்க்கார் என்றுகூட பொருள் இருந்திருக்கலாம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த மே மாதம் முதல் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்படும் இது போன்ற முட்டை வீச்சு சம்பவங்கள் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இது மனிதநேயமற்ற செயல் என்று தெரிவித்த நீதிமன்றம், இதனைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காளிகாட் மற்றும் போஸ்டா ஆகிய பகுதிகளில் நடந்த இது போன்ற இரு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்துள்ளது.

ஹரியானா: தொழிலதிபரைத் தாக்க வந்த ரௌடிகள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!

ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று இரவு ரௌடிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், இரு தரப்பினரும் கிட்டத்தட்ட 60 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலின் முடிவில், நான்கு ரௌடிகள் க... மேலும் பார்க்க

`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி

ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர். ப... மேலும் பார்க்க

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நி... மேலும் பார்க்க

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து... மேலும் பார்க்க

சூடான சமோசா வாங்க ரயிலை நடுவழியில் நிறுத்திய பைலட் ? - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

ரயில்களை தேவையில்லாமல் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. ஆனால் சில நேரங்களில் தொழில் நுட்ப காரணங்களுக்காக ரயில் சில இடங்களில் நிறுத்தப்படுவதுண்டு. ஆனால் மத்திய பிரதேசத்தில் ரயில் டிரைவர்கள் ... மேலும் பார்க்க