`மறுமணம் செய்து கொள்ளுங்கள்'- கணவருக்கு கடிதம் எழுதிவிட்டு மகனுடன் 18வது மாடியில...
`யார் சாமி இவன்?'- கிங் கோலியையே வலைப்பயிற்சியில் திணறடித்த இளம் வீரர் அகிப் நபி!
டாப் கிளாஸ் பிளேயர் என்றால் அது நம்ம கிங் கோலிதான்! விராட் கோலி பேட்டிங் ஆட ஆரம்பித்தாலே எதிரில் பந்து வீசுபவர்களுக்கே ஒரு பயம் இருக்கும். எப்படி பந்து வீசுவது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு விராட் கோலி பல சம்பவங்களைச் செய்திருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட கோலியையே ஓர் இளம் வீரரின் பந்துவீச்சு திணறடித்திருக்கிறது என்றால் சும்மாவா?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், நீண்ட நாட்களுக்குப் பிறகு நம் ரோ-கோ இணை ஒருநாள் ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. இதையடுத்து, ஒருநாள் போட்டிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்குப் பந்துவீச அகிப் நபி, அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார் ஆகியோர் களமிறங்கினர். இதில் அகிப் நபியின் பந்துவீச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. காரணம், ஒவ்வொரு பந்தையும் சமாளிக்க முடியாமல் விராட் கோலியே திணறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

மிகவும் துல்லியமாக ஒரு பந்தை உள்ளே திருப்பி வீசினால், அடுத்த பந்தை வெளியே ஸ்விங் செய்திருக்கிறார். சில பந்துகள் கோலியின் கால்களிலும் தொடையிலும் பட்டிருக்கின்றன. தொடர்ந்து பந்துகளைச் சரிவர ஆட முடியாமல் போனதால் கோலியே ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்திருக்கிறார்.

இப்படிப்பட்ட பந்துவீச்சை வெளிப்படுத்திய அகிப் நபி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காகச் சிறப்பாகச் செயல்பட்டவர். தற்போது காயமடைந்த பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
வலைப்பயிற்சியிலேயே கிங் கோலிக்குக் கடும் சவால் கொடுத்திருக்கும் அகிப் நபி, ஒருநாள் போட்டியில் களமிறங்கினால் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது!
















