செய்திகள் :

`யார் சார் இப்ப ரேடியோ கேக்குறாங்க?' - `வானொலி' புத்தகங்களை பரிந்துரைக்கும் தங்க.ஜெயசக்திவேல்

post image

49-வது சென்னை புத்தகக் காட்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாசகர்களின் இறுதிகட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகக் காட்சியில் வானொலித் துறையின் மீது கொண்ட மிகுந்த ஆர்வத்தால் வானொலி தொடர்பான படிப்பினை படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றி வானொலி குறித்து இதுவரையில் 10 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் தங்க.ஜெயசக்திவேல் அவர்களை சந்தித்து உரையாடினோம்.

"வானொலியும் எழுத்துலகும்"

``வானொலிக்கும் எழுத்துக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது என்றே கூறலாம். உங்கள் மூளையின் கற்பனை குதிரையை தட்டி எழுப்புவது தான் எழுத்து. அதே போன்றுதான் வானொலியும். வானொலி ஒலிபரப்புகளான நாடகங்கள், திரைசார்ந்த நிகழ்வுகள் பற்றி கேட்கும் பொழுது அதைக் கேட்கும் படிப்பறிவற்ற பாமர மக்களையும் கற்பனை உலகிற்கு கொண்டு செல்லும்.

ஆனால் காட்சி ஊடகத்தில் நீங்கள் பார்க்கும் போது, இது போன்ற கற்பனை உலகத்திற்கு உங்களால் செல்ல முடியாது. கல்கி எழுதிய புத்தகத்தில் நீங்கள் வந்தியத்தேவனை படிக்கும் போது பலருக்கு வந்தியத்தேவன் கட்டுகோப்பான உடல் கொண்டவராக, ஒரு கற்பனை இருக்கும். அதையே திரைப்படத்தில் பார்க்கும்போது வந்தியத்தேவன் இவர் தானா.. குந்தவை இப்படித்தான் இருப்பாரா.. என்று எண்ண கற்பனைக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது.

ஆனால் எழுத்துக்கள் கற்பனை உலகிற்கு உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் சிறகு விரித்து அழைத்துச் செல்லும். எழுத்தைப் போலவே வானொலியின் பின்னணி இசையும் கதையாடலும் எழுத்து உலகின் உலகத்திற்கே உங்களை இட்டுச் செல்லும்.

எழுத்துலகிற்கும் வானொலிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை இருக்கிறது. படிக்கிற வாசகர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எழுத்து. அதே போலத்தான் செவிகள் வழியே கேட்கின்ற செய்திகளை சுவைக்கும் மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது வானொலி தான்.

வானொலி சார்ந்த எனது தெரிவு செய்யப்பட்ட, பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்றால்,

முதல் புத்தகம் "உலக வானொலிகள்" பொது சேவை ஒலிபரப்புகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் அரசு சார்ந்த வானொலிகள் மட்டும் இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட வானொலிகள் குறித்தான செய்திகள் இதில் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று ஒருவர் அந்த வானொலிகளை தொடர்பு கொள்ள முயன்றால், அந்த புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வானொலியின் இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு பேச முடியும்.

இரண்டாவது புத்தகம் ஹாம் ரேடியோ என்ற தலைப்பிலான புத்தகம்."ஹாம் ரேடியோ ஓர் அறிமுகம்" ஹாம் ரேடியோ என்பது லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கு மற்றும் அவசரகால தொடர்புகளுக்காக பயன்படுத்தும் தனி நபர்களுக்கான இருவழி வானொலி தொடர்பு சேவை.

ஹாம் ரேடியோ பற்றி புதிதாக கேள்விப்படுபவர்களுக்கு ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இருப்பினும் தமிழில் அறிமுகம் கொடுக்கக்கூடிய முதல் புத்தகம் இது தான்.

மூன்றாவது "யார் சார் இப்ப ரேடியோ கேக்குறாங்க..?" என்கிற புத்தகம். இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், பல பேரிடம் ரேடியோ பற்றி பேசும்போது யார் சார் நீங்க..?இப்ப யார் ரேடியோ கேக்குறாங்க..? என்றுதான் முதல் கேள்வி வரும் என்ற அடிப்படையிலேயே இந்த தலைப்பிட்டு ஒரு புத்தகத்தை தொகுத்து இருக்கிறேன். சென்னையில் வசிக்கும் வானொலி கேட்கும் நேயர்களை சந்தித்து அவர்களுடனான நேர்காணல்களின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

நான்காவது "பன்முகப் பார்வையில் சீன வானொலி". இதில் 14 புத்தகங்களை ஒரு தொடராக வெளியிட திட்டமிட்டிருந்தோம். தற்போது ஐந்து புத்தகங்கள் வெளியாகி உள்ளன.

அதில் முதல் புத்தகம் "சீன வானொலி"

இரண்டாவது புத்தகம் "பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி",

மூன்றாவது "பன்முகப் பார்வையில் வேரிதாஸ் வானொலி",

நான்காவது "பன்முகப் பார்வையில் பிபிசி வானொலி",

கடைசியாக வந்தது "பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி", வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி உலக வானொலி தினத்தில் "பன்முகப் பார்வையில் வத்திகான் வானொலி" வர இருக்கிறது. மார்கோனியால் தொடங்கப்பட்ட வானொலி இது.

இதன் சிறப்பு, இன்றும் தமிழில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 14 புத்தகங்களும் தமிழ் ஒலிபரப்பில் சிற்றலையில் ஒலிபரப்பும், ஒலிபரப்பிய வானொலிகள் பற்றியது . அதனால் அதனை ஆவணப்படுத்துகிறோம்." என்றார்.

`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்

49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி ... மேலும் பார்க்க

``எழுத்துக்கள், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்" - எழுத்தாளர் புனித ஜோதி

49 ஆவது சென்னை புத்தகக் காட்சி வாசகர்களின் அமோக வரவேற்புடன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக புத்தக வெளியீடுகளும், புத்தக விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசி... மேலும் பார்க்க

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி... தவறவிடக்கூடாத 5 நூல்கள்!

பராசக்தி தடைபராசக்தி தடை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்பராசக்தி என்றவுடன் இயல்பாகவேஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடு... மேலும் பார்க்க

விழிச்சவால்: `வாசிப்பு மகிழ்ச்சியை தொடு உணர்வின் மூலமாக கடத்துகிறோம்!' - சிறார் எழுத்தாளர் விழிஞன்

சென்னை புத்தகக் காட்சியில் பல புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.அதன் ஒரு பகுதியாக வி... மேலும் பார்க்க

`போதிய தொகை இல்லை; உள்அரங்கில் இடம் கிடைப்பதில்லை; ஆனா.!" - சாலையோர புத்தக கடைகள் ரவுண்ட்அப்

49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய புத்தக வெளியீடுகளும், எழுத்தாளர்களையும் வாசகர்களையு... மேலும் பார்க்க