செய்திகள் :

ரகுபதி, வன்னி அரசு டு விஜயபாஸ்கர் - குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்!

post image

தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ பதவியை பலர் பெற்றுள்ளனர்.

அந்தத் தொகுதிகள் என்னென்ன என்கிற பட்டியலை இங்கே பார்ப்போம்...

அந்தியூர்:

அதிமுக வேட்பாளர் ஹரிபாஸ்கர்1,260 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சிவபாலனை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி, அந்தியூர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார்.

கம்பம்:

751 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஜெகநாத்மிஷ்ரா வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் திமுக வேட்பாளர் எரமகிருஷ்ணன்.

ஐ.பி.செந்தில்குமார்
ஐ.பி.செந்தில்குமார்

திண்டுக்கல்:

1,131 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் நசீர் ராஜாவை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார் வெற்றி.

கள்ளக்குறிச்சி:

அதிமுகவின் ராஜீவ் காந்தி 798 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷிடம் வெற்றியைத் தவறவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி:

214 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷிடம் இருந்து வெற்றியைத் தட்டிச் சென்றுள்ளார்.

கரூர்:

1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதியழகனை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கிள்ளியூர்:

1,311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சபின்.

கோவில்பட்டி:

843 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் வேட்பாளர் கருணாநிதி வெற்றி. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியன்.

குளித்தலை:

579 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சுரியனூர் ஏ.சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணி.

கும்பகோணம்:

679 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்பழகனைப் பின்னுக்கு தள்ளி தவெக வேட்பாளர் வினோத் வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

மானாமதுரை:

1,208 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் இளங்கோவன் முதல் இடத்தையும், திமுக வேட்பாளர் தமிழரசி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மணப்பாறை:

1,426 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்து உள்ளவர் அதிமுக வேட்பாளர் விஜயகுமார்.

மன்னார்குடி:

1,566 வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் காமராஜ் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி ராஜாவை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

பழனி:

693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரவிமனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன் குமாரிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

பாபநாசம்:

1,065 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் ஷாஜகான், தவெக வேட்பாளர் அசாருதீன் உதுமான் அலியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

பரமத்தி-வேலூர்:

308 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

போளூர்:

227 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அபிஷேக்கிடம் தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றியை நழுவவிட்டுள்ளார்

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:

1,867 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முத்துராஜா தவெக வேட்பாளர் ஷெரீப்பை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

ஶ்ரீவைகுண்டம்:

1,186 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சரவணன் அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

திருமயம்:

1,492 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு டஃப் போட்டி கொடுத்தவர் தவெக வேட்பாளர் சிந்தாமணி.

திண்டிவனம்:

734 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் வன்னி அரசு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளவர் அதிமுக வேட்பாளர் அர்ஜூனன்.

திருக்கோவிலூர்:

285 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் ஆர்.பரணிபாலாஜியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பத்தூர்:

1 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளர் பெரிய கருப்பனிடம் இருந்து வெற்றியைத் தட்டி சென்றுள்ளார்.

உதகமண்டலம்:

976 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இப்ராஹிமை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

போஜராஜன் பா.ஜ.க
போஜராஜன் பா.ஜ.க

உசிலம்பட்டி:

1,805 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் எம்.விஜய் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

வேப்பனப்பள்ளி:

138 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஶ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டி:

910 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சிவகுமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.

*இந்தப் பட்டியலில் 2,000-க்கும் கீழ் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க