செய்திகள் :

"ரஜினி, ஆக்‌ஷன் சினிமா பிடிக்கும்; கட்சியை கண்டு பயம்" - மோகன்லால் நேர்காணலில் பினராயி விஜயன்

post image

கண்டும் மிண்டியும் என்ற தலைப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கான டீசர்  'மக்கள் மனதில் நிறைந்த, மக்களை மனதில் நிறைத்த இருவர்' என்ற வாசகத்துடன் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி நேற்று வெளியிடப்பட்டது. அதில் சர்ச்சைக்குரிய கேள்விகளோ, அரசியல் கேள்விகளோ இடம்பெறவில்லை. முதல்வர் பினராயி விஜயன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, விரும்பும் உணவு உள்ளிட்டவை குறித்து பகிர்ந்துகொண்டார். அதில் மோகன்லால் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "மாற்றுக்கருத்து உள்ளவர்கள் மீது எனக்கு வெறுப்பு இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை தவறு செய்ததாக நினைக்கவில்லை. எனக்குப் பயம் என்பது கட்சி மீது மட்டும்தான்.

என் மீதான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்கவில்லை.  பிடித்த திரைப்படங்களில் ஒன்று மோகன்லால் நடித்த அமிருதங்கமய ஆகும். எனக்கு ரஜினி நடித்த சினிமாக்கள் மிகவும் பிடிக்கும். பொதுவாகவே ஆக்‌ஷன் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்.

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேர்காணல்.நடத்திய நடிகர் மோகன் லால்

வீட்டு உணவுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். சிங்கப்பூர் பயணம் எனக்கு பிடித்தமான பயணமாக இருந்தது. எங்களுக்குப் பிறகு எங்களை விட்டுச் செல்ல வேண்டியவர்கள் எங்களை விட்டுச் சென்றதால் பெரும் துயரம் ஏற்பட்டது. கொடியேரி பாலகிருஷ்ணனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். எனது உத்வேகம் ஏ.கே.ஜி. என்னுடன் உடன்படாதவர்கள் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. நான் எப்போதும் கட்சியிலேயே இருப்பேன். என்னை தளர்வடையச் செய்யும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நான் சொன்னதை மக்கள் கேட்டனர். சிறு வயதில் என் அம்மா எனக்கு பாடல்கள் சொல்லித்தருவார்கள். நான் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியபிறகு அம்மாவுக்கு கிருஷ்ணன் பாட்டு, ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை வாசித்து சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதன்மூலம் சன்னியாச வாழ்க்கையின் ஒரு அம்சம் என் வாழ்க்கையில் ஏற்பட்டது.

முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் மோகன்லால் நடத்திய நேர்காணல்

கல்லூரியில் படித்த நாட்களில் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மிகவும் பணக்காரரான அவர் ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையானார். அப்போது நான் மாணவர் அரசியலில் ஈடுபட்டிருந்தேன். நான் என் நண்பரிடம், 'மது அருந்தாதே, மதுவை பயன்படுத்தக் கூடாது' என்று சொன்னேன். காலம் செல்லச் செல்ல, அவரது குடிப்பழக்கம் எல்லை மீறிச் சென்றது. அதனால் நான் அவரது நட்பை முறித்துக் கொண்டேன். பின்னர், அவர் ஒரு தீவிர குடிகாரராக மாறி சாலை ஓரங்களில் அமர்ந்திருக்கும் அளவுக்குச் சென்றார். நான் நட்பை முறித்துக் கொண்டது  அவரை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் சென்றதாக நான் அடிக்கடி எண்ணுவேன். நான் அப்போது அவரை விட்டுச் செல்லாமல் இருந்திருந்தால், இவ்வளவு குடிகாரராக மாறியிருக்க மாட்டார் என்று பின்னர் உணர்ந்தேன்" என்றார்.

இது தேர்தலுக்கான பி.ஆர் நிகழ்ச்சி என காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.

இனி 'இந்த' ஏஐ வேண்டாம் - ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு; காரணம் என்ன?

ஏ.ஐ இப்போது உலக அரசாங்கங்களின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்கல்ல.அமெரிக்காவின் அரசாங்க துறைகளில் பெரும்பாலும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ (Anthropic) பயன்படுத... மேலும் பார்க்க

'அமைதிப்படை அமாவாசை தான் ஓபிஎஸ், தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என.!' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரையில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, " தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது மூலம் அவர் தி... மேலும் பார்க்க

'செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகளைப் போல வேறு யாரும் அனுபவித்ததில்லை!' - கோவையில் ஸ்டாலின்

'என் வாக்குச் சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க

பணி நிறைவுபெறாத தக்கலை பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர்; போராடிய பா.ஜ.க; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், மினி டைடல் பார்க் உள்... மேலும் பார்க்க