செய்திகள் :

ரத்தினம் என்பது ஒளிரும் கல் மட்டுமல்ல; அது தலைமுறைகள் போற்றும் பாரம்பரியத்தின் பிரகாசமான சின்னம்!

post image

இயற்கையின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக விளங்குவது ரத்தினக் கற்கள் ( Gemstones ).  ஆயிரம் ஆண்டுகளாக அழகு, செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வருகின்றன.

அவற்றின் தனித்துவமான நிறம், ஒளிர்வு மற்றும் அரிதான தன்மை மட்டுமல்லாமல், ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென ஒரு வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் நம்பிக்கையை தன்னகத்தே கொண்டுள்ளது.

நமது மரபில், ரத்தினக் கற்கள் அழகை உயர்த்தும் அணிகலன்களாக மட்டும் கருதப்படாமல், ஒவ்வொரு ரத்தினமும் ஒரு கிரகத்தின் ஆற்றலுடன் இணைக்கப்பட்டு நவகிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு, அதிர்ஷ்டம், செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை வழங்கும் சின்னங்களாகவும் கருதப்படுகின்றன.அதனால் திருமணங்கள், பண்டிகைகள், ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் அன்றாட வாழ்விலும் ரத்தினக் கற்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன.

“நவம்" என்றால் ஒன்பது, "ரத்தினம்" என்றால் மணிக்கல் என்று பொருள் பெறுகிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ரத்தினக்கல் குறியீடாக அமைந்துள்ளது. நிலைத்திருக்கும் மதிப்பையும் கலைநயத்தையும் ஒருங்கிணைத்து பிரதிபலிக்கும் ரத்தினக் கற்கள், பாரம்பரிய நகைகளிலிருந்து நவீன வடிவமைப்புகள் வரை பல்வேறு அணிகலன்களில் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகின்றன. இயற்கையின் அரிய பொக்கிஷங்களாக விளங்கும் இக்கற்கள், திறமையான கைவினைக் கலைஞர்களின் கைவண்ணத்தில் மேலும் மெருகேறி, தலைமுறைகளைத் தாண்டி போற்றப்படும் நகைகளாக மாறுகின்றன.

முந்தய நாட்களில் வைர மோதிரம், மரகத பாதக்கமாக அணியப்பட்ட நவரத்தின ஆபரணம்— ஒவ்வொரு வடிவமைப்பும், அணிபவரின் கதையையும், வாழ்க்கைப் பயணத்தையும் பிரதிபலிக்கிறது. இன்று அதே நவரத்தினங்களை ( Gemstones ) காலத்திற்கேற்ப மாறுபடுத்தி, அழகிலும், வடிவிலும் நவீன முறையில் வடிவமைத்தும் அணியப்படுகிறது. இவை அனைத்தையும் நமது தங்கமயில் ஜுவல்லரியில் ( thangamayil jewellery ) சிறந்த வேலைப்பாடுடன் செய்து தரப்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களின் சக்தியை இந்த ரத்தினங்களான மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், கனக புஷ்பராகம், வைரம், நீல புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் 

கொண்டுள்ளது.

நவரத்தினங்களும் அவற்றின் சிறப்புகளும்: 

1. மாணிக்கம் (Ruby) 

சிம்ம ராசிக்குரிய இந்த சிவப்பு நிற ரத்தினம் சூரிய பகவானைக் குறிக்கிறது. தலைமைத்துவம், ஆற்றல், அரசாட்சி அதிகாரம் ஆகியவற்றைக் குறிக்கும் மாணிக்கம், ஆரோக்கியத்தையும் மன உறுதியையும் அதிகரிக்கும் கல் என நம்பப்படுகிறது. அதன் ஆழமான சிவப்பு நிறம் உயிரோட்டத்தையும் தன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. திருமண நகைகள், பாரம்பரிய நகைகளில் மாணிக்கம் எப்போதும் முன்னணியில் உள்ளது.

2 .முத்து (Pearl)  

கடக ராசிக்குரிய முத்து, சந்திர பகவானின் பிரதிநிதி. கடலின் அரிய பரிசாக விளங்கும் முத்து, மென்மை, தூய்மை மற்றும் நேர்த்தியின் அடையாளமாகும்.

மனநிலை அமைதி, உணர்ச்சி சமநிலை, தாய்மை, பாசம் ஆகியவற்றைக் குறிக்கும் இக்கல் நல்லுறவுகளை வலுப்படுத்தவும் அணியப்படுகிறது. முத்துமாலை என்பது காலத்தை கடந்த நாகரிகத்தின் அடையாளம். பாரம்பரிய பட்டுப் புடவையிலிருந்து மேற்கத்திய உடை வரை அனைத்திற்கும் பொருந்தும்.

3 .கனக புஷ்பராகம் (Yellow Sapphire) 

தனுசு மற்றும் மீன ராசிக்குரிய இந்த தங்க மஞ்சள் நிற கல், குரு பகவானைக் குறிக்கிறது. தங்க நிறத்தில் ஒளிரும் புஷ்பராகம், வளம் மற்றும் அறிவின் அடையாளமாக கருதப்படுகிறது. கல்வி, செல்வம், குடும்ப வளம் ஆகியவற்றின் சிறப்புக்காக அணியப்படும் இந்த ரத்தினம் ஞானத்தையும் நல்வாழ்வையும் ஈர்க்கும் கல்லாக கருதப்படுகிறது.

4. கோமேதகம் (Hessonite) 

தேன் நிறமான கோமேதகம் ரத்தினம், ராகு கிரகத்தைக் குறிக்கிறது. தேன் நிறத்திலிருந்து செந்நிறம் வரை பல்வேறு வண்ணங்களில் காணப்படும் கோமேதகம், 

தன்னம்பிக்கை, மனத் தெளிவு, வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை வரவேற்கும் ரத்தினமாகக் கருதப்படுகிறது. தீர்க்கமான முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தவும், அசாதாரண லாபங்களை ஈர்க்கவும் இக்கல் அணியப்படுகிறது.

5. மரகதம் (Emerald) 

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்குரிய இந்த பச்சை நிற ரத்தினம் புதன் பகவானைக் குறிக்கிறது. மரகதத்தின் பசுமை, இயற்கையின் புத்துணர்ச்சி மற்றும் அறிவையும் உணர்த்துகிறது. திறன் வளர்ச்சி, அறிவாற்றல், வணிக வெற்றி ஆகியவற்றை மேம்படுத்தும் கல் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது. உலகின் உயர்தர நகை வடிவமைப்புகளில் மரகதம் தனி இடத்தைப் பெற்று, தங்க நகைகளில் மரகதம் மிகவும் நேர்த்தியாகக் காட்சியளிக்கிறது.

6. வைரம் (Diamond)  

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்குரிய இந்த ஒளிரும் கல், சுக்கிரன் பகவானைக் குறிக்கிறது. உலகின் மிகவும் பிரபலமான ரத்தினமான வைரம், உறுதி, செல்வ வளம் 

மற்றும் நிரந்தரத்தின் அடையாளமாக விளங்குகிறது. அழகு, அன்பு, கலைத்திறன், செழிப்பு ஆகியவற்றின் சின்னமாக இருக்கும் வைரம், அனைத்து ரத்தினங்களிலும் சிறப்புமிக்க கல்லாக கருதப்படுகிறது. திருமண மோதிரங்கள் முதல் அன்றாட அணிகலன்கள் வரை வைரம் அனைத்து தலைமுறையினரின் விருப்பமான தேர்வாகப்படும் அரிய ரத்தினமாக கருதப்படுகிறது.

7. வைடூரியம் (Catseye Chrysoberyl) 

பூனையின் கண்ணைப் போன்ற ஒளிக்கீற்றைக் வெளிப்படுத்தும் தனித்துவமான தோற்றத்தால் உலகின் மிகவும் வியப்பூட்டும்  இந்த அரிய கல் கேது கிரகத்தைக் குறிக்கிறது. பாதுகாப்பு, விழிப்புணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் உள்ளுணர்வுகளை மேம்படுத்தவும் இக்கல் அணியப்படுகிறது. வைடூரியம் உருவாகும் செயல்முறை இயற்கையின் மிக நுணுக்கமான அதிசயங்களில் ஒன்றாகும். ஒளி அதன் மேற்பரப்பில் நகரும் போது உருவாகும் அந்த ஒற்றை ஒளிக்கோடு, இந்த ரத்தினத்திற்கு தனித்துவமான அடையாளத்தையும் வழங்குகிறது.

8. நீலம் / நீல புஷ்பராகம் (Blue Sapphire) 

கும்பம் மற்றும் மகர ராசிக்குரிய இந்த ஆழ்ந்த நீல நிற கல் சனி பகவானைக் குறிக்கிறது. விரைவான பலனையும் அதிக ஆற்றலையும் கொண்ட இக்கல், தொழில் வளர்ச்சி, மன உறுதியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. இந்த ரத்தினம், அதிகாரம், ஒழுக்கம் மற்றும் நீண்டகால வெற்றியின் சின்னமாக கருதப்படுகிறது. பெண்களுக்கான பதக்கங்களிலும் இது தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.

9. பவளம் (Coral) 

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்குரிய சிவப்பு நிற பவளம், செவ்வாய் பகவானைக் குறிக்கிறது. கடலின் ஆழத்தில் உருவாகும் பவளம், வீரத்தையும் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது . தைரியம், உடல் வலிமை, உற்சாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் கல் எனக் கருதப்படுகிறது.

பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் இணைத்து, இந்த ஒன்பது ரத்தினங்களும் தலைமுறை தலைமுறையாக நம் பண்பாட்டின் ஒரு பகுதியாக தொடர்கின்றன.

நவரத்தினங்கள் ஒவ்வொன்றும் ஒரு சக்தியை பிரதிபலிக்கும் அற்புதமான  இயற்கை படைப்புகள்.

மாணிக்கத்தின் தலைமைத்துவ சக்தி முதல் பவளத்தின் தைரியம் வரை, முத்தின் அமைதி முதல் வைரத்தின் செழிப்பு வரை - ஒவ்வொரு கல்லும் ஒரு தனித்துவமான கதையையும், ஆற்றலையும் கொண்டுள்ளது.  இந்த ரத்தினம் பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. தனிநபரின் ஜாதக அமைப்பு மற்றும் நிபுணரின் ஆலோசனையின் அடிப்படையில் அணியப்படும் போது நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது.

இயற்கையின் அரிய ரத்தினங்களை சான்றளிக்கப்பட்ட தரத்துடன், பாரம்பரிய கைவினை நுணுக்கமும் நவீன வடிவமைப்பும் இணைந்து புதிய பரிமாணம் பெறுகின்றன.  தனிக் கற்கள்  முதல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள், பதக்கங்கள், முத்துமாலைகள், தங்கம், வெள்ளியில் உருவாக்கப்படும் ஆபரணங்கள், நவரத்தின ஆலோசனைக்கேற்ப ஆபரண வடிவமைப்பு, பரிசு பயன்பாட்டிற்கான வடிவமைப்புகள் வரை, ஒவ்வொரு படைப்பும் அழகையும் அர்த்தத்தையும் ஒன்றிணைத்து கலைநயத்தின் சிறப்புமிகு வெளிப்பாடாக திகழ்கிறது.

அனைத்து நவரத்தினங்களை உயர்தரத்துடன் பெறவும், இந்நவரத்தினங்களை அணிவதற்கான ஆலோசனைகளை நமது நம்பகமான ஜோதிடருடன் ஆராய்ந்து தனது தனித்துவமான தேவைக்கேற்ப சிறந்த ரத்தினக்கற்களாக வாங்குவதற்கும், ஒவ்வொரு ரத்தினமும் ஒரு தனிப்பட்ட அனுபவமாகவும், அர்த்தமுள்ள பரிசாகவும், வாழ்நாள் நினைவாகவும், உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கும் பிரத்யேக ஆபரணமாக வடிவமைக்கப்படுவதற்கும், மேலும் விபரங்களை அறிய அருகில் உள்ள தங்கமயில் ஜுவல்லரிக்கு ( thangamayil jewellery )வாருங்கள். 

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறை ரோபோடிக் அறுவைசிகிச்சை சாதனம் அறிமுகம்!

ரோபோடிக் அறுவைசிகிச்சையில் பத்தாண்டு கால நிபுணத்துவம் கொண்ட மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சிகிச்சை தரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, நவீன Toumai™ MT-1000 Pro ரோபோடிக் அறுவைசிகிச்... மேலும் பார்க்க

தங்கமயில் ஜுவல்லரியின் 26-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்!

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் 66 கிளைகள் வாயிலாக நகை விற்பனைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் தங்கமயில் ஜுவல்லரி லிமிடெட் நிறுவனத்தின் 26வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (Annual Gen... மேலும் பார்க்க

தனிஷ்க்: மல்லிகைப் பூவால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட 'நறுமுகை' அன்கட் வைர ஆபரணத் தொகுப்பு அறிமுகம்

மல்லிகைப் பூவின் காலத்தால் அழியாத அழகால் ஈர்க்கப்பட்டு, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள வைர ஆபரணத் தொகுப்பு 'நறுமுகை', தென்னிந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆபரணப் பாரம்பரியத்தை நவீன 'அன்கட்' (Unc... மேலும் பார்க்க

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் ஆர். பூமிநாதனுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்திய உயர்கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் ஆர். பூமிநாதன் விருந்தோம்பல் (Hospitality) கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு மற்றும் சேவையைப் பாராட... மேலும் பார்க்க

மதுரையில் பிரமாண்ட அச்சு-பேக்கேஜிங் எக்ஸ்போ! 180+ ஸ்டால்களில் உலகளாவிய பிராண்ட் இயந்திரங்கள் சங்கமம்

மதுரை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் (Madurai District Tiny & Small Scale Industries Association - MADITSSIA) நடத்தும் 11ஆவது தி பிரிண்ட் என் பேக் 2026 ( The Print N Pack 2026) கண்காட்ச... மேலும் பார்க்க

'ஆண்களை முந்திய பெண்கள்' - Start-up நிறுவனங்கள் நடத்துவதில் சாதனை; இந்தியளவில் தமிழ்நாடு முன்னிலை!

தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் புத்தொழில் (Startup) நிறுவனங்களைத் தொடங்கி சாதித்து வருகின்றார்கள் என்ற தகவல் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பெண்கள் தொடங்கும் ஸ்டார்ட் அப... மேலும் பார்க்க