செய்திகள் :

"ராஜிவ் கொலையில் திமுகவுக்குச் சம்பந்தம் என்பதால்தான்..." - ராகுல் குறித்து சி.டி.ஆர் நிர்மல் குமார்

post image

தவெகவின் இணைப் பொதுச்செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.

Nirmal Kumar
Nirmal Kumar

நிர்மல் குமார் பேசியதாவது, ''இதுவரை காணாத வித்தியாசமான தேர்தல் இது. மக்கள் அலை அலையாகத் திரண்டு வந்து வாக்களித்திருக்கிறார்கள். திமுக வழக்கம்போல தங்களின் வேலையைக் காட்டினார்கள்.

சைதாப்பேட்டை, எழும்பூர், மதுரை தெற்கு போன்ற தொகுதிகளிலெல்லாம் திமுகவினர் தவெகவினரைத் தாக்கியிருக்கின்றனர்.

திருச்சி கிழக்கில் இரவு 1 மணி வரை கள்ள ஓட்டு போடப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. தங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளான செந்தில்வேலன், உமாநாத், டேவிட்சன் ஆகியோரை வைத்துக் கொண்டு போக்குவரத்தை முடக்கி மக்களுக்கு இடையூறு கொடுத்திருக்கிறது திமுக.

குறைந்தபட்சமாக 20 லட்சம் மக்கள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 5 ஆண்டுகள் முழுவதும் இந்த திமுக அரசு தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்திருக்கின்றனர். இதோ இப்போது உதயநிதி துபாய் கிளம்பிவிட்டார். முதல்வர் கொடைக்கானல் கிளம்பிவிட்டார். இவர்களுக்கு இது மட்டும்தான் தெரியும்.

Nirmal Kumar.
Nirmal Kumar

தனது அப்பாவின் கொலையில் திமுகவுக்குச் சம்பந்தம் இருக்கிறது என்பதால்தான் ராகுல் எப்போதும் திமுகவுடன் ஒட்டாமலே இருந்து வந்தார். 2006 சமயத்திலிருந்தே சென்னை வந்தால் கலைஞரைக்கூட நேரில் சந்திக்கமாட்டார்.

தேர்தல் கணக்குகளுக்காக மட்டுமே திமுகவோடு கூட்டணியில் இருக்கிறார். தவெகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் என சோசியல் மீடியாவில் பரவுவது எல்லாம் பென் நிறுவனத்தின் வேலையே'' என்றார்.

தெலங்கானா : 'அப்பா முன்ன மாதிரி இல்ல!' - புது கட்சி தொடங்கிய சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ்வின் மகள் கவிதா 'தெலுங்கானா ராஷ்டிர சேனா' என்கிற புதிய கட்சியை இன்று தொடங்கியிருக்கிறார். TRSதெலங்கானாவில் ஒரு தனியார் விடுதியில் கட... மேலும் பார்க்க

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை; பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்படுமா?

இந்திய ரயில்வே நிர்வாகம் தனது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தைக் குறைக்க அதிரடி உத்தரவிட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் கு... மேலும் பார்க்க

கோவை: ஸ்ட்ராங் ரூம்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்ணும் மையம்கோவை ஜி சி டி கல்லூரி வாக்கு எண்... மேலும் பார்க்க

ஈரான் போர் நெருக்கடி: பணத்தைத் திருப்பிக் கேட்ட அபுதாபி; சவுதியிடம் 'கடன்' வாங்கி கடனை அடைத்த பாக்

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், 'அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)'. 'The Dawn Newspaper' தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து... மேலும் பார்க்க