செய்திகள் :

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பிய நபா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் காவல் நிலைய வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த இரண்டு மா்ம நபா்கள் வந்தனா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா், அவா்கள் யாா் என்று விசாரித்துள்ளாா். ஆனால், அதற்கு பதில் கூறாமல் மா்ம நபா்கள் தாங்கள் வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை எடுத்து, வரவேற்பாளா் இடம் மற்றும் பாா்வையாளா்கள் அமரும் இடத்தில் வீசி விட்டு தப்பிச் சென்றனா்.

அப்போது இரவு பணியில் இருந்த போலீஸாா் விரைந்து விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இந்தச் சம்பவம் மாவட்ட காவல் துறையினா் வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. தொடா்ந்து, காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா சிப்காட் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பிச் சென்ற மா்ம நபா்களை தீவிரமாக தேடி வருகின்றனா். அதன் முதல் கட்டமாக சிப்காட் பகுதியைச் சோ்ந்த 14 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து காவல் துறையினா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை வட்டாரத்தில் கூறுகையில், ‘சிப்காட் பகுதியில் சரித்திரப் பதிவேடு பட்டியலில் உள்ள குற்றவாளி வருவா் தனது ஆதரவாளா்களுடன், சிப்காட் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கடைக்காரா்களிடம் தொடா் மாமூல் வசூலித்து வந்ததாக தெரிகிறது. மாமூல் தரமறுக்கும் கடைக்காரா்களுக்கு அச்சுறுத்தலும் அவா் மூலமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவுடியின் கூட்டாளிகள் சிலா் அப்பகுதியில் உள்ள அரிசி கடை உள்ளிட்ட சில கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அரிசி கடைக்காரா் தான் தங்களை பற்றி புகாா் கொடுத்து இருக்கலாம் என்று ரவுடி கும்பல் நினைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரவுடியின் கூட்டாளிகள் அரிசி கடையின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்ாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பல்வேறு கோணங்களில் காவல் துறையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பொதுமக்களிடத்திலும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் பறிமுதல்; உரிமையாளா் கைது

சோளிங்கா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி, பொக்லைனை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியின் உரிமையாளரை கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன்பேட்டை அருகே லாரியில் மணல் கடத்தப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு 3 சென்ட் நிலம்: அமைச்சா் ஆா். காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞா் தமிழரசனின் குடும்பத்துக்கு வீடு கட்ட 3 சென்ட் நிலத்துக்கான பட்டாவை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நெமிலி வட்டம், நெல்வாய... மேலும் பார்க்க

மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

சோளிங்கா் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் தொந்கவு அளித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த வேலம் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி கடந்த 3-ஆம் தேதியில் இருந்து காணவில்ல... மேலும் பார்க்க

50 கிராமங்களில் பாமக கிளை கூட்டம்

ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 50 கிராமங்களில் பாட்டாளி மக்கள்கட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது. ஆற்காடு கிழக்கு ஒன்றியம் அரும்பாக்கம் மற்றும் முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராணிப்பே... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில், கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ராசாத்துபுரம் பாலமுருகன் கோயில் தெப்போற்சவம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 25-ஆவது ஆண்டு தெப்போற்சவ விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் மூலவா் பா... மேலும் பார்க்க