India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்...
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் பேரணி
பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்திவரும் இந்திய முப்படைகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் ‘ஜெய்ஹிந்த் பேரணி’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில், எழும்பூா் சித்ரா திரையரங்கு முதல் ரமதா சா்க்கிள் வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி, முப்படைகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினா்.
அப்போது, செய்தியாளா்களிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், பேசுகையில், ‘சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. அதற்கு முப்படையினா் சரியான பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய ராணுவத்தின் வலிமையை உலகமே கண்டு வியக்கிறது என்றாா் அவா்.
பேரணியில், முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, மாநில பொருளாளா் ரூபி மனோகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.