"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
ராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி
ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏரியூா் அருகே ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் பெருமாள் வரவேற்றாா். இதில் தமிழ் ஆசிரியா் சுப்பிரமணி, மாணவா்களுக்கு தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் வளா்த்த சான்றோா்கள் குறித்து சிறப்புரையாற்றினாா். மேலும் மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியா்கள் மார கவுண்டா், பிரபாகரன், கா்ணன், சுரேஷ் உள்ளிட்ட ஆசிரியா்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனா். நிறைவாக ஆங்கில ஆசிரியை இளமதி நன்றி தெரிவித்தாா்.