செய்திகள் :

லண்டனில் அஜித் கலந்துகொள்ளும் Car Race; தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

post image

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இன்று பிரிட்டன் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை நீளும் விஜய்யின் பயணப் பட்டியலில், இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவர் கடந்த கூட்டத்தொடரில் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ், தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஒரு 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' (Motor Sports City) மாநிலத்தில் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"சில்வர்ஸ்டோன் மோட்டர் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடுவது மூலம் அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன்,

சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்
சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்

மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்" என்று தமிழ்நாடு அரசு அறிக்கை கூறுகிறது.

இந்தப் பயணத்தில் லண்டனில் இருக்கும் Le Mans Cup சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை விஜய் தொடங்கவிருக்கிறார்.

இந்தப் போட்டி வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 12) நடக்க உள்ளது

இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க இருக்கிறார் என்பது இதன் ஹைலைட்.

தொழில் முதலீடு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: இன்று பிரிட்டன் செல்கிறார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏழு நாள் பயணமாக இன்று பிரிட்டன் கிளம்புகிறார். மீண்டும் அவர் வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார். இது தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என்று தமிழ்நாடு அரசு அறிக்... மேலும் பார்க்க

தமிழக இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்திற்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக - யார் அவர்கள்?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பாகக் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக. மதுராந்த... மேலும் பார்க்க

"ஒரு மதத்தைத் திருப்தி செய்ய அரசியல் செய்கிறீர்கள்" - மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதில்

இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "நான் கோவிலுக்கு செல்வேன். இதையெல்லாம் மதவாதம் என்று சொல்லிவிடமுடியாது, இன்னொரு மதத்திற்கு எதிரானது கிடையாது. நயினார்... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: ``முதலமைச்சர் விஜய்யின் நோக்கம் இதுதான்" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து எதிர்க்கட்சிகளும், தவெக-வின் கூட்டணியில் இருக்கும் சி.பி.ஐ உள்ளிட்ட இடதுசாரிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டினப... மேலும் பார்க்க

`பொறுப்புணர்வுடன் முன்னெடுத்துச் செல்வேன்' - தவெக எம்.எல்.ஏ. கனிமொழிக்கு கூடுதல் பொறுப்பு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக த.வெ.க-வைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செ... மேலும் பார்க்க

`விஏஓ-வுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!' - தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத... மேலும் பார்க்க