செய்திகள் :

வகுப்புகள் புறக்கணிப்பு; ஜந்தர் மந்தர் பாணி திரள்! - சென்னையில் வேகமெடுக்கும் காக்ரோச் போராட்டம்?

post image

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையிலான மாணவர்கள் போரட்டம், தமிழகத்திலும் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு, தொடர் காத்திருப்பு போராட்டங்கள் என களத்தில் இறங்கியிருக்கின்றனர்

லயோலா கல்லூரி
லயோலா கல்லூரி

விரைவு நீதிமன்றங்கள் மூலம் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி நேற்றிரவு வீடியோ வெளியிட்டிருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் போராடும் காக்ரோச்கள், தொடர்ந்து ஜந்தர் மந்தரில் குழுமி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் களத்துக்கு வர தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை லயோலா, மாநிலக் கல்லூரி, நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் தங்களின் வகுப்புகளை புறக்கணித்து நீட் தேர்வுக்கு எதிரான முழக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

SFI போராட்டம்
SFI போராட்டம்

SFI மற்றும் DYFI மாணவ அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 5 மணி வரை மட்டுமே காவல்துறையினர் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். ஆனால், மாணவ அமைப்பினர் இந்தப் போராட்டத்தை 'சென்னை ஜந்தர் மந்தர்' எனப் பெயரிட்டு தொடர்ந்து நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தினர் சாஸ்திரி பவன் முற்றுகையில் ஈடுபட்டுருந்தனர். உழைப்போர் உரிமை இயக்கத்தினர் ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கும் மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க