மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: சாத்தான், மாந்திரிகம், அம்மன் சக்தி - சுந்தர்.சி ...
"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்
சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார்.
தென்னிந்தியப் படங்களில் முழுமையான திரைக்கதை இருப்பது அரிது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக 'India Today' ஊடகத்திற்குப் பேட்டி அளித்தப்போது ரெஜினாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "உங்களுக்கு ஏதேனும் அசௌகரியமாகவோ அல்லது பிடிக்காமலோ இருந்தால், தயவுசெய்து அந்தப் படத்திலிருந்து விலகி வெளியேறுங்கள். வடஇந்திய நடிகர்கள் தென்னிந்திய சினிமாவைப் பற்றி இதுபோன்று பேசும்போது எனக்கு அதில் உடன்பாடில்லை. அப்படி செய்யக்கூடாது.
அறியாமலேயே நீங்கள் வடக்கு-தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள், அது முற்றிலும் தவறானது. நான் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் இருந்தது. ஆனால், என்னை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார். எந்தக் காரணமும் சொல்லாமல், எந்த விளக்கமும் கொடுக்காமல் விளம்பரப் பணிகளில் இருந்து என்னுடைய பெயரை நீக்கிவிட்டார்கள்.

என்னுடைய படப்பிடிப்பில் உருவாக்கப்பட்ட ஒரு பாடலை வெளியிட்டபோதுக்ஒரு கூட என்னை டேக் செய்யவில்லை. இதை நான் என்னவென்று சொல்வது. தென்னிந்திய நடிகையாக இருப்பதால்தான் தனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது என்று சொல்லலாமா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
















