செய்திகள் :

வருங்கால மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிய இளைஞர் - ராசிபுரம் ஆச்சர்யம்!

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக் சரவணன் (வயது: 32). பொறியியல் பட்டதாரியான இவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா என்கிற வர்ஷினிக்கும் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சேலத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், தனது வருங்கால மனைவிக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்க வேண்டும் என அசோக் சரவணன் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, லண்டனில் வசிக்கும் தனது சகோதரியின் உதவியுடன் சுவிட்சர்லாந்தில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, நிலாவில் நிலம் வாங்குவதற்காக விண்ணப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ashok saravanan

தொடர்ந்து, இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 23,000 செலுத்தி, நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அசோக் சரவணன் கூறுகிறார். இதற்காக, 10 பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் அந்தத் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருங்கால மனைவிக்கு உலகில் யாரும் வழங்காத வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிலாவில் நிலம் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து, ராசிபுரம் சுற்றுவட்டார பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

`எதை வேண்டுமானாலும் செய்ய நீங்கள் என்ன கடவுளா?' மகா., உணவுத்துறை அதிகாரி துகாராமுக்கு ஐகோர்ட் கேள்வி

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள், உணவுப்பொருள், மருந்... மேலும் பார்க்க

நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் - ரூ.92 லட்சத்தை திருடிய 29 பேர் கைது

நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ தாண்டிவிட்டது. இது தவிர 320 இந்தியர்கள் உட்பட 2500 பேரைக்... மேலும் பார்க்க

16 வயதில் AI நிறுவனம்; அப்பாவுக்கே மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்! - யார் இந்த ‘AI Kid of India?'

ஒரு பக்கம் 12-ஆம் வகுப்புப் படிப்பு... இன்னொரு பக்கம் AI நிறுவனம், புதிய தொழில்நுட்பக் கருவிகள், உலகம் முழுவதும் பயிற்சி என பிஸியாக இயங்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ராவுல் ஜான் அஜூ. A... மேலும் பார்க்க

40 ஆண்டுகள் தலைமறைவு: பரோலில் தப்பி, சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி, மீண்டும் கைது!

`சட்டம் தன் கடமையைச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அது தூங்கிவிடும்; எனினும் இறுதியில் விழித்துக்கொள்ளும்' என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி, பரோலில் வெளியே வ... மேலும் பார்க்க

"ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது. அத... மேலும் பார்க்க

மேற்கு வங்க மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்; 3 வாரத்தில் 60 பேர் இறப்பு

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் புதி... மேலும் பார்க்க