செய்திகள் :

`எதை வேண்டுமானாலும் செய்ய நீங்கள் என்ன கடவுளா?' மகா., உணவுத்துறை அதிகாரி துகாராமுக்கு ஐகோர்ட் கேள்வி

post image

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் எடுத்து வரும் நடவடிக்கைகளால் உணவகங்கள், உணவுப்பொருள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. மும்பையில் பிரபல உணவு செயின் நிறுவனமான மெக்டொனால்டு கடை சுத்தமாக இல்லை என்று அதன் லைசென்ஸை துகாராம் முண்டே சஸ்பெண்ட் செய்தார். இதே போன்று பல உணவகங்களின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு புனேயில் உள்ள மருந்து தயாரிக்கும் சிப்லா நிறுவனம் சரியாக விதிகளை பின்பற்றவில்லை என்று அந்நிறுவனத்தை மூடினார்.

இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளால் துகாராம் முண்டேயின் பெயரைக் கேட்டாலே அனைத்து நிறுவனங்களும் அச்சம் அடைந்துள்ளன. மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் இருந்த உணவகம், மும்பை ஐ.ஐ.டி வளாகத்தில் இருந்த கேண்டீன்களையும் மூட முண்டே உத்தரவிட்டார்.

மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை பாந்திராவில் உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் இருந்த 5 ரெஸ்டாரண்ட்கள் சரியாக விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி அதன் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இதை எதிர்த்து மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

கடந்த 25ம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு புதிய ஆய்வு நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் சேவையை நடத்தும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் தனியுரிமையை கவனத்தில் கொண்டு நடைமுறைக்கு சாத்தியமான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உணவகங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கைகளில் 88% உரிம விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்று மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் உணவகங்களை நடத்தும் ஷிர்கே இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரின் மூத்த வழக்கறிஞர் வினீத் நாயக் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதோடு மும்பை கிரிக்கெட் அசோசியேசன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ஆர். தோண்ட்,'' உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உணவகங்களின் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்ய இப்போது எந்த காரணமும் இல்லை என்று" தெரிவித்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மனு மீதான தங்களது முந்தைய உத்தரவைப் பின்பற்றாததற்காக, நீதிமன்ற அவமதிப்புக்காக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகதுறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து உணவு மற்றும் மருந்து ஆணையம் தனது நோட்டீஸை திரும்பப் பெற முன்வந்தது. எனவே பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் செயல்படும் ஐந்து உணவகங்களின் உரிமங்கள் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தது.

"இது (இடைநீக்கத்தை ரத்து செய்வது) கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளிலும் நடக்கிறது," என்று தலைமை நீதிபதி ஆர்.வி. குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு கூறியது. அதோடு சஸ்பெண்ட் உத்தரவை வழங்கிய அதிகாரியின் பெயரை நீதிபதிகள் கேட்டனர். "நீதிமன்ற உத்தரவு உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையா? உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு இல்லையா?'' என்று தலைமை நீதிபதி கேட்டார். மேலும், "நீங்கள் (FDA) என்ன கடவுளா. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக புனேயில் உள்ள சிப்லா பார்மா அண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் மருந்து விற்பனை உரிமத்தை ரத்து செய்த உத்தரவை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திரும்பப் பெற்றது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வரம்பு மீறி செயல்பட்டதாகவும், அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டதாக பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அங்கத் ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்து இருந்தது.

நேபாள வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாதுகாப்பு பெட்டகம் - ரூ.92 லட்சத்தை திருடிய 29 பேர் கைது

நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ தாண்டிவிட்டது. இது தவிர 320 இந்தியர்கள் உட்பட 2500 பேரைக்... மேலும் பார்க்க

16 வயதில் AI நிறுவனம்; அப்பாவுக்கே மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்! - யார் இந்த ‘AI Kid of India?'

ஒரு பக்கம் 12-ஆம் வகுப்புப் படிப்பு... இன்னொரு பக்கம் AI நிறுவனம், புதிய தொழில்நுட்பக் கருவிகள், உலகம் முழுவதும் பயிற்சி என பிஸியாக இயங்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவன் ராவுல் ஜான் அஜூ. A... மேலும் பார்க்க

40 ஆண்டுகள் தலைமறைவு: பரோலில் தப்பி, சிறந்த ஆசிரியரான ஆயுள் தண்டனைக் கைதி, மீண்டும் கைது!

`சட்டம் தன் கடமையைச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அது தூங்கிவிடும்; எனினும் இறுதியில் விழித்துக்கொள்ளும்' என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி, பரோலில் வெளியே வ... மேலும் பார்க்க

"ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மராத்தி கற்க ஒரு வருடம் அவகாசம்" - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கட்டாயம் மராத்தி தெரிந்திருக்கவேண்டும் என்றும், மராத்தி தெரியாத ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை அறிவித்தது. அத... மேலும் பார்க்க

மேற்கு வங்க மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்த குழந்தைகள்; 3 வாரத்தில் 60 பேர் இறப்பு

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த மாதத்தில் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து வருகின்றன. இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் புதி... மேலும் பார்க்க

Vikatan Digital Awards: பிரபலங்கள் சங்கமிக்கும் மேடை! நீங்களும் கலந்துக்கொள்ளலாம்; எப்படி தெரியுமா?

டிஜிட்டல் உலகின் திறமையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்தாண்டும் விகடன் டிஜிட்டல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. முதல் முறையாகக் கடந்த ஆண்டு விகடன், டிஜிட்டல் விருதுகள் நிகழ்வைப் ... மேலும் பார்க்க