செய்திகள் :

நேபாள வெள்ளம்: ஒரே ஒரு போன் கால்; 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய தலைமையாசிரியர்!

post image

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழிக்கான உதாரணமாகி இருக்கிறார் ராஜேந்திர ததாபி.

கடந்த 26-ம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர சம்பவத்தில், 1,000-க்கும் மேற்பட்ட உயிர்களைத் தனது சமயோசித புத்தியால் காப்பாற்றி இருக்கிறார் ராஜேந்திர ததாபி.

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திர ததாபி.

நேபாளம் வெள்ளப்பெருக்கு
நேபாளம் வெள்ளப்பெருக்கு

இந்தப் பள்ளிக்கு அருகே இருக்கும் திரிசூலி ஆற்றுப் பகுதியிலும் கடந்த 26-ம் தேதி கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த வெள்ளப்பெருக்கு குறித்து ததாபிக்கு அவருடைய நண்பர் கூறியிருக்கிறார்.

உடனே, ததாபி பள்ளி மணியை அடித்து, பள்ளியில் இருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் உயரமான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தியிருக்கிறார்.

அடுத்ததாக, பள்ளிப் பேருந்துகளின் டிரைவர்களுக்குப் போன் செய்து, மாணவர்களை மீண்டும் அவர்களுடைய வீட்டிலேயே இறக்கிவிடக் கூறியிருக்கிறார்.

அந்த நேரத்தில், ஒரேயொரு பள்ளிப் பேருந்து மட்டும் ஆற்றுப் பாலத்தைக் கடந்துகொண்டிருந்திருக்கிறது.

உடனே, அந்தப் பேருந்தையும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லச் சொல்லி எச்சரித்திருக்கிறார்.

நல்ல வேளையாக, அந்தப் பேருந்து பாலத்திலிருந்து கடந்த சில நிமிடங்களிலேயே, அந்தப் பாலம் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து கொஞ்ச நிமிடங்களில், மூன்று அடுக்குக் கட்டடமான அந்தப் பள்ளியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், ராஜேந்திர ததாபி என்கிற ஒற்றை மனிதரின் சாதுர்யத்தால், 1,643 மாணவர்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் தற்போது பத்திரமாக உள்ளனர்.

சல்யூட் ராஜேந்திர ததாபி!

நேபாளம்: 3 நாள்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 6 வயது சிறுமி - துளிர்ந்த நம்பிக்கை!

பல நூறு பேரைக் கொன்ற நேபாள வெள்ளப் பேரிடரில் சின்ன ஆச்சர்யமும் நடந்துள்ளது. கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் தொடங்கியதே... மேலும் பார்க்க

Nepal: "எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரின் நிலை குறித்து தெரியவில்லை!"- கண்ணீர் மல்கிய ஜக்கி வாசுதேவ்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் நேற்று (ஆக. 26) காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக நேபாள அரசு அதிகாரபூர்வமாக தெரிவி... மேலும் பார்க்க

Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாற... மேலும் பார்க்க

Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video

This is seriously scary. CCTV footage from Gyirong Port in Tibet, China, directly opposite Nepal’s Rasuwa district. This flash flood hit here first and later caused massive havoc in Nepal. Can’t even ... மேலும் பார்க்க

Rain Alert: இடி, மின்னலுடன் மழை; 15 மாவட்டங்களுக்கு காலை வரை அலர்ட்; சென்னைக்கு என்ன?

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்தது. சில இடங்களில் இன்னும் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று ... மேலும் பார்க்க

ஊட்டி: எல்-நினோ தாக்கம்; தரை தட்டிய அணைக்கட்டுகள் - தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்!

எல்- நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளிப் பகுதிகளுக்கு இணையாக நீலகிரியின் பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அ... மேலும் பார்க்க