செய்திகள் :

வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் மான்கள்; 'மான் பூங்கா' அமைக்க கோரிக்கை; கைவிரிக்கும் அதிகாரிகள்

post image

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது.

இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக் காடுகளில் மான்கள் அதிக அளவு வசித்து வருகின்றன.

மான்
மான்

அந்த மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக சாலைகளைக் கடந்து இந்த ஏரிக்கு வரும்போது, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சூழல் உள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் மான்களைப் பாதுகாக்க மான் பூங்கா அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேனியல்,

"இந்தப் பகுதியில் அதிகளவு மான்கள் வசிக்கின்றன. அவை இங்கு செல்லும் ரயில்களிலும், சாலைகளில் செல்லும் வாகனங்களிலும் அடிப்பட்டி இறக்கின்றன. இன்று அவை வசிக்கும் காப்புக் காடுகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இல்லை என்றால், தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வரும்போது வாகனங்களில் அவை அடிப்பட்டு இறப்பதைத் தடுக்கும்விதமாக இந்தப் பகுதியில் மான் பூங்கா அமைக்க வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தேன். ஆனால், வனத்துறை சார்பில், 'காப்புக் காடுகளிலிருந்து தண்ணீர் அருந்துவதற்காக வந்து செல்லும்போது சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டு மான்கள் இறக்க நேரிடுகிறது.

deniyal

ஆனால், மான்கள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க வாகன தணிக்கையின்போது, 'மெதுவாக செல்லுங்கள்' என்று அவ்வப்போது ஓட்டுநர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம்.

அதேபோல், கல்லகம் ஏரியில் மான் பூங்கா அமைப்பதற்கான ஏற்ற சூழ்நிலைக்கான இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என்று சொல்லி இருக்காங்க. மான்களை எப்படித்தான் காப்பாற்றுவது? வாகனங்களில் அடிப்பட்டு மான்களைப் பாதுகாக்கு போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க