செய்திகள் :

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

post image

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை காண வேண்டுமென ஆர்வத்தோடு கூடிய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கின்றனர். முதல்வரின் லண்டன் ரசிகர் சந்திப்பு சொதப்பியதற்கு அவரின் தனி பாதுகாவலர் `மூசா'தான் முக்கிய காரணம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம்
முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரங்கள் அறிந்த சிலர், 'முதல்வர் விஜய் 10 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி துபாய் வழியாக மறுநாள் லண்டன் வந்து சேர்ந்தார். லண்டனில் தி ஷார்ட் என்கிற உயரமான கட்டிடத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

விமான நிலையம் தொடங்கி, முதல்வர் தங்கியிருந்த ஹோட்டல், சில்வர்ஸ்டோன் ரேஸிங் மைதானம் என எல்லா இடத்திலுமே அவரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடியிருந்தனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதே முதல்வர் பாதுகாப்புக்கென இருக்கும் கோர் செல் அதிகாரிகளுக்கும் லோக்கல் போலீஸூக்கும் பெரும் பாடாக இருந்தது.

அப்படியிருக்க, முதல்வர் தனியாக நியமித்திருக்கும் பாதுகாவலரான மூசா முதல்வருகளின் பாதுகாப்புக்கென இருக்கும் ப்ரோட்டோகால்கள் எதைப் பற்றியும் அறியாமல் கொடுத்த வாக்குறுதிதான் பிரச்னை ஆகிவிட்டது. முதல்வர் லண்டனின் தரையிறங்கிய உடனேயே அவரை பார்க்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர்.

முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம்
முதல்வரை சந்திக்க கூடிய கூட்டம்

அந்தக் கூட்டத்தை அப்படியே விட்டிருந்தால் முதல்வர் வந்து கையசைத்திருப்பார். அவர்கள் கலைந்து போயிருப்பார்கள். ஆனால், மூசா, '15 ஆம் தேதி ஒரு ரசிகர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அன்று வந்து முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்' என வாக்குறுதி கொடுத்துவிட்டார். முதல்வர் தரப்பு லண்டன் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்த நினைத்தது உண்மைதான். ஆனால், அதற்கென ப்ரோட்டோக்கால் இருக்கிறது.

லண்டன் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச வேண்டும். இந்த பிராசஸ் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே மூசா ரசிகர்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்கிறார்கள். அந்தத் தகவல் லண்டன் வாழ் தமிழர்களின் சமூக வலைதள பக்கங்களில் தீயாய் பரவ நேற்று முதல்வர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

பெர்மிசன் எதுவும் இல்லாமல் லோக்கல் போலீஸின் சப்போர்ட் இல்லாமல் இவர்களை எப்படி முதல்வரிடம் நெருங்க செய்ய முடியும்? `தி ஷார்ட்' பகுதி அதி சொகுசான இடம். அங்கே இருக்கும் மற்ற விவிஐபிக்களின் பாதுகாப்பையும் லோக்கல் போலீஸ் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை.

இந்த குழப்பத்தை சரி செய்து கூடியிருந்த கூட்டத்தை கலைப்பதற்குள் முதல்வரின் Core Cell டிஐஜி தர்மராஜ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் திக்குமுக்காடிவிட்டனர்' என்கின்றனர்.

மூசா - தர்மராஜ்
மூசா - தர்மராஜ்

'ரசிகர் சந்திப்பு தகவலை மூசா முன்கூட்டியே சொல்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் மூசா மீது அதிருப்தியில் இருக்கின்றனராம். ஆனாலும் முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு விஷயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர்' என அதிகாரிகள் வட்டத்தில் கிசுகிசுக்கின்றனர்.

'அமைச்சரவையின் முதல் விக்கெட்... பதைபதைப்பில் 'கில்லி' சரத்? - அதிரடிக்கு தயாராகும் முதல்வர்?

கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை நுணுக்கியது தொடங்கி தாம்பரம் மாநகராட்சி டெண்டர் ஊழல் வரைக்கும் தொடர் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கில்லி சரத். 'அமைச்சர் போதைப் பொருள் பயன்படுத்தினார... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: பள்ளியில் கழிவறை இருந்தும் காவிரி படுகையை நாடும் மாணவர்கள்; அவலநிலைக்கு காரணம் இதுதான்!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நூறு ஆண்டுகளைக் கடந்த இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளில்... மேலும் பார்க்க

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் ... மேலும் பார்க்க

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆ... மேலும் பார்க்க