செய்திகள் :

`விகடனின் தனிச்சிறப்பே கார்ட்டூன்-தான்; ஒரு காலத்தில் என்ன நடந்ததென்பது..!' - ஜே.சி.டி.பிரபாகர்

post image

Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், ``தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் எம்.ஜி.ஆர், அம்மா, விஜய் என மூவருக்குமான பொதுவான விஷயம்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிற மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி. இறைவன் அருளால் அவர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்து வருகிறேன். I'm Enjoying It.

M.SC B.ed பட்டதாரி என்னுடைய மனைவி. பொது வாழ்வில் இருக்கும் என் மூலம் அவர் நிறைய படித்து முன்னேற நினைத்தார். ஆனால், எனக்காக அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்.

எல்லா சபாநாயகர்களுக்கும் சில தனிச் சிறப்புக் குணங்கள் உண்டு. அந்த வகையில் பழனிவேல் ராஜனை எனக்குப் பிடிக்கும். செஸ் பெடரேஷனின் தலைவராக இருந்தேன். அம்மா ஆட்சிக்காலத்தில் விஸ்வநாதன் ஆனந்துக்கும் கார்ல்சனுக்கும் நடந்த உலக செஸ் போட்டியை சென்னையில் நடத்த முக்கிய காரணமாக இருந்தேன்.

விளையாட்டுகளின் மீது எனக்கு ஆர்வம் உண்டு" என்றார்.

விகடனுடைய தனிச்சிறப்பு அவர்களின் கார்ட்டூன் தான். உங்களுடைய கார்ட்டூனால் ஒரு காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும்.

சமீபத்தில் கூட மத்திய அரசு குறித்து நீங்கள் வரைந்த கார்ட்டூனை உதாரணமாக சொல்லலாம்.

இந்த கம்பெனி சார்ந்து இதை வாங்குங்கள் என்றால் அவர் விளம்பரதாரர் ஆகிவிடுவார்.

ஆனால், தரத்தை பொறுத்து எதை வாங்கலாம்... கூடாது என மக்கள் மொழியில் சொல்வதால்தான் ரெஜினுக்கு இந்த விருது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மா இருந்த போது, என்னை சென்னை மேயர் ஆக்கப் போவதாக கூறினார். உடனே என்னுடைய மகன், மேயரான பிறகு புதிய கார் வாங்க வேண்டாம்.

அதற்கு முன்பாகவே வாங்கிவிடுவோம் என Ford Endeavor வாங்கிக் கொடுத்தார். அதேமாதிரி இப்போது ஆயிரம் விளக்கில் போட்டியிடும் போதும், 'அப்பா நீங்கள் ஆயிரம் விளக்கில் வென்றுவிடுவீர்கள்.

ஜெயித்த பிறகு கார் வாங்கினால் தவறாக பேசிவிடுவார்கள். அதனால் இப்போதே வாங்கிவிடலாம்' என ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். எனக்கு பெயர் ஞாபகம் வரவில்லை. காரை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளின் சாய்ஸ்தான்.

ஆனால், எனக்கு பழைய அம்பாசிடர் கார்தான் பிடிக்கும்" என்றார்.

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? - அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் ஜெ.முகமது பர்வேஸ்.இவர், கடந்த சில நாட்களாக தமிழக சட்ட... மேலும் பார்க்க

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? - வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலைய... மேலும் பார்க்க

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" - தவிக்கும் கோவை கிராம மக்கள்

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள்... மேலும் பார்க்க

"முதலாளிகளே லஞ்சம் தருகின்றனர்; நடவடிக்கை எடுப்பீர்களா?" - அமைச்சர் கீர்த்தனாவிடம் CPIM கேள்வி

லஞ்சம் வாங்குவது குறித்து நேற்று இரவு (செப்டம்பர் 4) அமைச்சர் கீர்த்தனா, "லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்... மேலும் பார்க்க

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' - ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி இன்னும் நான்கு நாள்கள் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் ஈரானின் முக்கிய எரிசக்தி கட்டமைப்பான கார்க் தீவுக்கு அருகே தாக்குதலை ... மேலும் பார்க்க

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்... மேலும் பார்க்க