செய்திகள் :

விகடன் சம்பவம்!

post image
ஐந்து தலைமுறையா நம்ம வீட்டுப் பிள்ளையா, முறுக்குக் காட்டும் மாப்பிள்ளையா, பல நேரம் நண்பனா இருந்த விகடன் இப்போ ‘செஞ்சுரி’ அடிக்கிறான்! இந்த 100 வருஷத்துல எத்தனையோ முறை எங்களை நீங்க கொண்டாடுனீங்க... இப்போ நாங்க உங்களைக் கொண்டாடப்போறோம்.

விகடன் உங்க லைஃப்ல பண்ண அந்த ‘தரமான சம்பவம்’ எது?

தாத்தா மடியில் உட்கார்ந்து எழுத்துக்கூட்டிப் படிச்சு குட்டு வாங்கின முதல் கதையா... விகடன் ஜோக்ஸ் படிச்சுட்டு, ஸ்கூல்ல சொந்த ஜோக்னு சொல்லி ஃப்ரெண்ட்ஸை டபாய்ச்ச தருணமா... ‘சொல்வனம்’ கவிதையை அப்படியே காப்பி அடிச்சு, லவ் லெட்டர்ல ஒட்டி, உங்க ஆள்கிட்ட செமயா அடி வாங்கின / செட் ஆன மொமன்ட்டா... எதுவா இருந்தாலும் சரி, உங்க வாழ்க்கையில `விகடன் செஞ்ச சம்பவம்’னு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்தானே... அதை அப்படியே எங்களுக்குச் சொல்லுங்க. விகடன் எப்படியெல்லாம் உங்க வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தியிருக்கான்னு எழுதி அனுப்புங்க. மறக்காம எந்த இதழ், எந்தப் படைப்பு, அந்த எழுத்தாளர் யார், உங்க வாழ்க்கையை அது எப்படிப் புரட்டிப்போட்டது என்பதையும் குறிப்பிடுங்க.

எப்படி? லெட்டர் போடுங்க, மெயில் தட்டுங்க... இல்லைன்னா போனை எடுங்க, ஒரு ரீல்ஸை சுடுங்க! மறக்காம #VikatanSambavam அப்படின்னு ஹேஷ்டேக் போடுங்க. சூப்பரான சம்பவங்களுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

அஞ்சலில் அனுப்ப: விகடன் சம்பவம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.

இமெயிலில் அனுப்ப: sambavam@vikatan.com