Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழ...
'திமுக மா.செக்கள் திருடர்கள்; மே 10 ஆம் தேதி விஜய் முதல்வர்!' - தவெக
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெகவின் தேர்தல் பிரசாரக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது.

அதில் பேசிய செங்கோட்டையன், '234 தொகுதிகளிலும் விஜய்தான் நிற்கிறார். விஜய் அடையாளம் காட்டப்போகும் வேட்பாளர்கள்தான் கோட்டைக்கு செல்லப்போகிறார்கள். தவெகவில் பெண்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னும் 90 நாட்கள்தான். அதிகாரிகள் உங்களை வரவேற்று வாருங்கள் உட்காருங்கள் என பணிவன்போடு பேசப்போகிறார்கள்' என்றார்.
தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், 'சென்னையில் நான்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேர் இருந்தும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. மழை வெள்ளத்தின் போது கருணாநிதி வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரில் இறங்கினார். ஸ்டாலின் பேண்ட் போட்டுக் கொண்டு இறங்கினார். இதோ உதயநிதியும் மழை தண்ணீரில் இறங்கிக் கொண்டிருக்கிறார். இங்கே என்ன மாறியிருக்கிறது? சென்னை திமுகவின் கோட்டை என ரவுடியிசத்தாலும் பணத்தாலும் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். வடசென்னை முழுவதும் குடிசைகள்தான். தென் சென்னைக்கு கிடைத்த வளர்ச்சி வட சென்னைக்கு ஏன் கிடைக்கவில்லை?

வரப்போகும் தேர்தல் சென்னை மக்களின் வாழ்க்கையை மாற்றும். தலைவர் பயந்துவிட்டார், தலைவரை மிரட்டிவிட்டார்கள் என திமுக எவ்வளவோ பொய்யுரைகளை பரப்பியது. இந்நேரம் தலைவர் 32 மாவட்டங்களில் பிரசாரத்தை முடித்திருக்க வேண்டும். கரூரில் செந்தில் பாலாஜி வேலையை செய்தார். அன்பில் மகேஸ் ஓடி வந்தார். உதயநிதி காலையிலேயே வந்தார். தலைவரின் பிரசாரத்தை முடக்கப் பார்த்தார்கள். ஆனால், கரூர் மக்களே தலைவரை ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை.
டெல்லிதான் தமிழ்நாடானு வசனம் பேசுற படம் எடுப்பாங்க. ஆனா, அந்தப் படக்குழுவை டெல்லிக்கு மோடியோட பொங்கல் கொண்டாட அனுப்புவாங்க. இதெல்லாம் உதயநிதிக்கு தெரியாம நடக்குமா?

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அது மத்திய அரசின் கீழ் வருவதாகவும் முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். கடல் வழியாக வரும் போதைப் பொருளை தெருவில்தானே விற்கிறார்கள்? உங்களின் காவல்துறை என்ன செய்தது? காவல்துறையை நேர்மையான காவல்துறையாக எங்களின் தலைவர் மாற்றுவார்.

டாஸ்மாக்கின் விற்பனை 55000 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதல்வரை 'குவார்ட்டர் முதல்வர்' என்றுதான் அழைக்க வேண்டும்.
திமுகவில் இருக்கும் மா.செக்கள் அத்தனை பேரும் திருடர்கள். தவெகவின் மா.செக்கள் அத்தனை பேரும் 30 வருடமாக சேவை செய்தவர்கள்.
அதிமுகவை விமர்சிக்காதீர்கள். அவர்களை பல ஆண்டுகளாக காணவில்லை. நம்முடைய கவனம் மொத்தமும் திமுக மீது மட்டும்தான் இருக்க வேண்டும். நாம்தான் ஜெயிக்கப் போகிறோம். மே 10 ஆம் தேதிக்குள் தலைவர் முதல்வர் ஆகிறார்.
எனக்கான முகவரியை கொடுத்தது திருமா அண்ணன். நான் என்றைக்கும் நன்றியை மறக்கமாட்டேன். தோழர் பெ.சண்முகத்தோடும் நமக்கு எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.
நான்கரை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அண்ணன் திருமாவுக்கு மரியாதை இல்லை' என்றார்.
















