Neeya Naana: "குழந்தைகள் அதைப் பார்த்துட்டு டாக்டர் ஆகணும்னு சொல்றாங்க!" - நெகிழ...
“எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” - விஜய்யின் தந்தை அழைப்புக்கு செல்வப்பெருந்தகை பதில்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது, "விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம் எஸ்.ஏ சந்திரசேகர் காங்கிரஸ் தொடர்பாக பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், " எங்கள் தொண்டர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவையில்லை.

இருந்தாலும் எங்களுக்கு பூஸ்ட் கொடுப்பதாகச் சொன்னதற்கு நன்றி. மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் விரைந்து செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
















