செய்திகள் :

விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர

post image

விஜய் தஞ்சை விஜயம்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் விஜய்
விஜய்

இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது.

அப்செட்டில் அன்பில் தரப்பு?

இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, "இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது.

திருமண அழைப்பிதழ்

தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள்.

ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம்.

காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு.

விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம்." என்றார்கள் விரிவாக.

ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர... மேலும் பார்க்க

'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை

நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.6 பே... மேலும் பார்க்க

ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அ... மேலும் பார்க்க

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எ... மேலும் பார்க்க

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க