செய்திகள் :

``விஜய்யின் வெற்றிக்குக் காரணம் இதுதான்"- எஸ்.ஏ.சந்திரசேகரன் நெகிழ்ச்சி

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சாதனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் த.வெ.க முன்னிலை வகித்து வருவது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய்யின் இந்த அதிரடி வெற்றி குறித்து அவரது தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என் மகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம் இருந்த தன்னம்பிக்கை பிரமிக்கத்தக்கது.

தமிழகத்தின் முதலமைச்சராக நான் வருவேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை விஜய்யிடம் இருந்தது. இன்று அந்த நம்பிக்கை பலித்து வருவதைப் பாராடுகிறேன். யாரோடும் கூட்டணி வைக்காமல், தனது சொந்தக் காலில் நிற்பேன் என்ற ஒரு தலைவனுக்கே உரிய துணிச்சலை விஜய் வெளிப்படுத்தினார். இது விஜய்க்கு கிடைத்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி" எனக் குறிப்பிட்டார்.

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகப் பெரிய அளவில் கூட்டணி இல்லாமல் களம் இறங்கிய தவெக, முதல் தேர்தலிலேயே இத்தனை இடங்களில் முன்னிலை வகிப்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு ஆகியவை இந்த 'வரலாற்று வெற்றிக்கு' முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க

TVK: ``ஆளுநர் ஏன் தயங்குகிறார்; மக்களின் தீர்ப்புக்கு மரியாதை இதுதானா?" - நடிகர் விஷால் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில்தான் திமுக கூட்ட... மேலும் பார்க்க

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவுக்கு நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிக்கலில் தவெக..!ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே... மேலும் பார்க்க

‘எந்த கொள்கையை விற்று இன்றைக்கு கோடீஸ்வரனாக இருக்கிறீர்கள்? ’ – டி.ஆர்.பாலுவுக்கு காங்கிரஸ் பதிலடி

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில், இரண்டு கட்சியினர் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இதனிடையே காங்கிரஸை காட்டமாக விமர்சித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு ஒரு அறிக்கை வெளியி... மேலும் பார்க்க

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க