செய்திகள் :

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

post image

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.

கருணாஸ்
கருணாஸ்

அவர் பேசியதாவது,

'மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன். மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்க்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை.

எனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன்.

என்னுடைய பலம் எனக்கு தெரியும். புதிதாகவும் நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன. அதனால் தொகுதிகளை விட தளபதியை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம்.

கருணாஸ்
கருணாஸ்

நல்ல மனநிலையில் இருக்கிறேன். இப்போது விஜய்யைப் பற்றி பேசாதீர்கள். அவரே மனவேதனையில் மன உளைச்சலில் இருப்பார். 200 கோடி கொடுத்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.' என்றார்.

மதுரை: பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் ’பெரியார், அண்ணா’ புகைப்படங்கள்!

மதுரையில் உள்ள மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச இருக்கிறார்.நாளை காலை புதுச்சேரியில் நடக்கு... மேலும் பார்க்க

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவை கட்டுரையாளர்... மேலும் பார்க்க

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" - குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேச... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிக... மேலும் பார்க்க

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' - என்ன சொல்கிறார் வேல்முருகன்

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.வேல்முருகன்அவர் பேசியதாவது, 'தவாகவுக்கு கூட... மேலும் பார்க்க