"நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பேசினார்கள்; ஆனால்.." - Fitness பயணம் குறி...
விஜய் குறித்த மோசமான கேள்வி; "ஊடகச் சந்திப்புகள் நாகரிகமான முறையிலும் இருக்கணும்" - மாளவிகா கண்டனம்
நடிகர் மாளவிகா மோகனன் தற்போது 'சர்தார் 2', 'பாக்கெட் நாவல்' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.

இந்நிலையில், விஜய் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் தேவையில்லாத விஷயங்களைக் உருவாக்குவதற்காக கேள்விகளை எழுப்பியதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.
அச்செய்தியாளரின் மோசமான செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
அந்தப் பதிவில் அவர், "நேற்றைய தினம் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன். தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது எனக்குப் பேரன்பும், மரியாதையும் எப்போதும் உண்டு.
ஆனால், அங்கிருந்த ஒரு சிலர் மட்டும் தேவையின்றி கதையைத் திசைதிருப்பும் வகையிலும், ரசனைக்கு அப்பாற்பட்டும் சில கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
அது முற்றிலும் தேவையற்ற ஒன்று. தளபதி விஜய்யை கடந்த ஏழு ஆண்டுகளாக எனக்கு நன்றாகத் தெரியும்.
I went for an event yesterday, and while I have the utmost regard for all the journalists and members of the Tamil Nadu media, a couple of them persistently asked some very distasteful questions that were completely unnecessary and sensational.
— Malavika Mohanan (@MalavikaM_) May 16, 2026
Thalapathy Vijay is someone I’ve…
அவர் மீது எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் உண்டு. அவரை என்னுடைய நல்லதொரு நண்பர் என்று சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவருடைய இந்த நெடிய பயணத்தைக் கவனிப்பது என்பது ஒரு அற்புதமான விஷயம்.
இனிவரும் காலங்களில், ஊடகங்களுடனான சந்திப்புகள் பரஸ்பர மரியாதையுடனும், நாகரிகமான முறையிலும் அமைந்தால் அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















