செய்திகள் :

"விஜய் சேதுபதி மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.!" - இயக்குநர் சீனு ராமசாமி

post image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.

புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,

சீனு ராமசாமி
சீனு ராமசாமி

பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.

முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார் சீனுராமசாமி.

Mandaadi: " 'உன்னை கொன்றுக்கணும், விட்டிருக்கக் கூடாது'னு கமென்ட்ஸ் போடுறாங்க!" - 'மண்டாடி' கிட்டான்

சூரியின் 'மண்டாடி' படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்... மேலும் பார்க்க

'பொக்கிஷமாகப் போற்றுவேன்!' - திருமண வாழ்வில் 20 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடிய சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா தம்பதி, தங்களுடைய 20-வது திருமண நாளைக் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி கொண்டாடினர். திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை கடந்ததையொட்டி, அதனை இந்த தம்பதியினர் கொண்டாடியிருக்கிறார்கள். அந்த கொண்டாட்... மேலும் பார்க்க

தனுஷின் 'ஓம்' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? நாளை தொடங்குகிறா D56? களத்தில் இறங்கிய தனுஷ் - பரபர அப்டேட்கள்

தனுஷின் 56 வது படமான 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படத்தின் படப்பூஜை மதுரையில் நாளை நடப்பதாக இருந்தது, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. இதற்கிடையே ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் அவர... மேலும் பார்க்க

Karunas: "எடப்பாடியை எதிர்த்து பேசியதற்காக என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன" - கருணாஸ்

மலையாள சினிமாவின் சில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராகப் பணியாற்றிய சஜீவ் பழூர், தமிழில் கருணாஸை வைத்து 'என்ன விலை' என்ற படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. நட... மேலும் பார்க்க

மைனா : பயணம் என்ன செய்யுமோ, மைனா அதை செய்தது.! `ஒன்றின்றி ஒன்றில்லை' | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 24

`சினி'ஸ்கோப் 24மைனா: ஒன்றின்றி ஒன்றில்லை!மைனாவின் அம்மா குருவம்மா சுருளியிடம், ‘உன்னை மாதிரி வெறும்பயலுக்கா என் புள்ளையைக் கொடுப்பேன்?’ என்று கொதிக்கிறாள். அவளுக்குத்தான் என்னவொரு சுயநலம்? ஒரு குட்டிப... மேலும் பார்க்க