செய்திகள் :

"விஜய் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படிச் செய்கிறார்'' - எல்.முருகன் சொல்வது என்ன?

post image

தேசிய ஜனநாயக் கூட்டணியில் பழநி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்காததைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

''பழநி தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுமென நம்பிக்கையோடு வேலை பார்த்தோம். ஆனால், திடீரென அதிமுக-விற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எல். முருகன்
எல். முருகன்

இது எங்களுக்கு ஏமாற்றமாகியிருக்கிறது. இது அதிருப்தியின் உச்சம்'' எனக் கூறி இன்று காலை பழநி புலிப்பாணி ஆசிரமத்துக்கு வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

நேற்று பழநி வந்தவர், மலைக்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

இன்று பழநியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியிருக்கிறார். அப்போது, ''விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை என்கிறாரே?'' எனக் கேட்டதற்கு, "தேர்தல் விதிகள் என அனைத்துமே இப்போது டெக்னாலஜிதான். விஜய் அவரைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கிறது. ஆன்லைன் மூலமாகவே அவர்கள் கேட்கலாம்" என்றவர் செந்தில் பாலாஜி கரூர் தொகுதியிலிருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாற்றப்பட்டது குறித்து பேசும்போது, "கரூரில் மக்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கலாம்.

எல். முருகன்
எல். முருகன்

அதாவது கரூரில் அவர்கள் செய்யாத அட்டகாசம் இல்லை. அதனால் கரூர் மக்கள் அவரைப் புறக்கணிப்பார்கள் என நினைத்து கோவைக்கு வந்திருக்கலாம்" என்றவர், "கூட்டணி குறித்து மாநிலத் தலைவர் நிறைய பேசிவிட்டார்.

இது எங்கள் கூட்டணி. அதனால் இந்த ஊர், அந்த ஊர் என நாங்கள் பார்க்கவில்லை. நாங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டணி.

அப்படித்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம்" எனக் கூறியிருக்கிறார்.

'சர்வே முடிவுகள்; கட்சிக் கட்டமைப்பு; MLA மீதான அதிருப்தி'- விஜய் பெரம்பூரை டிக் அடிக்க காரணம் என்ன?

விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டு தன்னுடைய தொகுதியிலிருந்தே பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார். விஜய் பெரம்பூர் தொகுதி... மேலும் பார்க்க

No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ... மேலும் பார்க்க

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' - விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 24 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜ... மேலும் பார்க்க

திமுக : ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; உதயநிதியின் ஆதிக்கம் - 'அப்ருவல்' கொடுத்த முதல்வர்!

மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை கழற்றிவிட்டு, தி.மு.க வின் வேட்பாளர்கள் அறுபது முகங்களை களத்தில் இறக்கியுள்ளது தலைமை. மண்டல பொறுப்பாளர்களின் ஆதிக்கம், கடைசி நேரத்தில் லிஸ்டில் மாற... மேலும் பார்க்க

தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் அந்தக் கட்சியின் வரவு, ... மேலும் பார்க்க

'விஜய் அறிவித்த 234 வேட்பாளர்கள்!' - முழு பட்டியல் இங்கே!

தவெக தலைவர் விஜய் அறிவித்த 234 வேட்பாளர்களின் பட்டியல் இங்கே.Vijay 1. பெரம்பூர் - விஜய்2. திருச்சி கிழக்கு - விஜய்3. தி.நகர் - புஸ்ஸி ஆனந்த்4. வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜூனா5. கொளத்தூர் - வி.எஸ்.பாபு6. ... மேலும் பார்க்க