செய்திகள் :

விஜய் : லண்டன் போலீஸ் சொன்ன காரணம்? - கடைசி நேரத்தில் முதல்வர் நிகழ்ச்சி ரத்து!

post image

தற்போது லண்டன் பயணத்தில் இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

தமிழ்நாட்டிற்கு முதலீடு ஈர்ப்பதற்காக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் சிலர் விஜய்யுடன் லண்டனுக்குப் பயணித்திருக்கின்றனர்.

நேற்று (செப்டம்பர் 15), லண்டனின் மிக உயரமான கட்டடம், ‘தி ஷார்ட்’ (The Shard)-ல் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஜயைக் காண ஆயிரக்கணக்கானோர் தி ஷார்ட்டில் கூடியிருந்தனர்.

தி ஷார்ட்
தி ஷார்ட்

நிகழ்ச்சி ரத்து

ஆனால், கடைசி நேரத்தில், லண்டன் போலீஸார் கூறிய ‘பாதுகாப்புக் காரணத்திற்காக’ அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதனால், விஜய் தரப்பிலிருந்து அங்குக் கூடியிருந்த மக்களுக்கு, “பொதுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை, அனுமதி இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டது.

இன்று இந்தியா திரும்புகிறார் விஜய். இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்காக ரூ.12,300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இறுதி ஒப்புதலுக்கு Waiting; கிடைத்துவிட்டால் இந்தியாமீது அமெரிக்காவின் 100% வரி பாயும்! விவரம் என்ன?

அடுத்த பிப்ரவரி மாதம் வந்தால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிடும்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘நான் அமெரிக்க அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவில் முடிப்பதற்கான பணிகளைச் செய்வேன்’ என்று ... மேலும் பார்க்க

'வாயை விட்ட மூசா;கடுப்பில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்?'- லண்டன் ரசிகர் சந்திப்பு ரத்து பின்னணி

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரசிகர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதல்வரை ... மேலும் பார்க்க

`அன்பில் மகேஸ் மீது ரெய்டு அஸ்திரம்; விரக்தியில் இலாயக்கற்ற அரசு...' - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஸ் வீடுகளில் இன்று காலை முதல் ... மேலும் பார்க்க

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்.! காதலியை சந்திக்க இலங்கைக்கு சென்ற 17 வயது சிறுவன் கைது

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆ... மேலும் பார்க்க

"அரசுப் பணத்தில் அமெரிக்கா செல்லவில்லை" - சிகாகோவிலிருந்து விளக்கம் அளித்த கேரள அமைச்சர்!

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில், ரமேஷ் சென்னித்தலாவுடன் இருக்கும் புகைப்படங்களை அங்குள்ள வெளிநாடு வாழ் கேரளத்தவர்களும், கேரள எம்.எல்.ஏ... மேலும் பார்க்க