`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பா...
`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
அம்மாவின் ஆட்சி
அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்' என்றார்.

இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.


















