செய்திகள் :

விண்வெளியிலும் ஆயுதம்? Orbit-ல் ‘Space Control Weapons’ இருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்ட அமெரிக்கா

post image

விண்வெளி என்றாலே நம் நினைவுக்கு வருவது செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்வுகள், நிலவு, செவ்வாய் போன்றவைதான். ஆனால், இனி விண்வெளி என்பது ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… ராணுவப் போட்டிக்கான களமாகவும் மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அமெரிக்காவின் புதிய அறிவிப்பு.

அமெரிக்காவிடம் தற்போது orbit-ல் ‘space control weapons’ இருப்பதாக அமெரிக்க விமானப்படைச் செயலாளர் Troy Meink தெரிவித்துள்ளார். செப்டம்பர் 14-ம் தேதி Maryland-ல் நடைபெற்ற Air, Space & Cyber Conference-ல் அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது விண்வெளியில் அமெரிக்கா ஆயுதத் திறன்களை வைத்திருப்பது குறித்து அந்நாடு வெளிப்படையாக தெரிவித்துள்ள முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

என்ன ஆயுதம்?

இதுதான் இந்தச் செய்தியில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி!

Troy Meink எந்த வகையான ஆயுதம், அதன் குறிப்பிட்ட திறன் என்ன, எப்போது orbit-ல் நிலைநிறுத்தப்பட்டது போன்ற விவரங்களை வெளியிடவில்லை. அமெரிக்க Space Force மட்டும், இவை “space control” பணிகளுக்கான capabilities என்று தெரிவித்துள்ளது.

Space control என்பது விண்வெளியில் எதிரியின் திறன்களை எதிர்கொள்வது தொடர்பான பரந்த ராணுவப் பணிகளைக் குறிக்கிறது. இதில் defensive மற்றும் offensive capabilities இரண்டும் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

ஏன் இப்போது இந்த அறிவிப்பு?

இதற்குப் பின்னால் சீனா மற்றும் ரஷ்யா முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.

அமெரிக்க Space Force-ன் பார்வையில், இரு நாடுகளும் விண்வெளி மற்றும் counterspace capabilities-ஐ தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. இதனால், தங்களுடைய விண்வெளி assets மற்றும் ராணுவப் படைகளைப் பாதுகாப்பதற்கான திறன்களை அமெரிக்கா அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.

இதன் மூலம் விண்வெளி என்பது இனி விஞ்ஞான ஆய்வுகளுக்கான போட்டி மட்டுமல்ல; நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அதிகாரப் போட்டியின் முக்கிய பகுதியாகவும் மாறி வருவது தெரியவருகிறது.

1967-ல் போடப்பட்ட அந்தக் கட்டுப்பாடு என்ன சொல்கிறது?

விண்வெளியில் ஆயுதங்கள் என்றவுடன், 1967-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Outer Space Treaty நினைவுக்கு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் Article IV, பூமியின் orbit-ல் அணு ஆயுதங்கள் அல்லது பிற Weapons of Mass Destruction (WMD) வைப்பதைத் தடை செய்கிறது. ஆனால், எல்லா வகையான conventional military capabilities-ஐயும் orbit-ல் வைத்திருப்பதை முழுமையாகத் தடை செய்யவில்லை.

அதனால்தான் தற்போதைய அமெரிக்க அறிவிப்பு சட்ட ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்து என்ன?

அமெரிக்கா என்ன வைத்திருக்கிறது என்பது குறித்து முழுமையான தகவல் வெளியாகாத நிலையில், இந்த அறிவிப்பு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாகக் காட்டுகிறது:

விண்வெளிப் போட்டி அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது.

செயற்கைக்கோள்கள் முதல் ராணுவத் தகவல் தொடர்பு வரை விண்வெளியைச் சார்ந்திருக்கும் உலகில், பெரிய நாடுகளுக்கு இடையிலான இந்தப் போட்டி அதிகரித்தால், எதிர்காலத்தில் விண்வெளி பாதுகாப்பு என்பது பூமியின் பாதுகாப்பைப் போலவே முக்கியமானதாக மாறலாம்.

அமெரிக்காவின் இந்த வெளிப்படையான அறிவிப்பு, அந்த மாற்றத்துக்கான மற்றொரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

"AI-யால் ஆபத்தா? பொன் முட்டையிடும் வாத்தை அறுக்காதீர்கள்" - ட்ரம்ப் தரும் விளக்கம் என்ன?

ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக், க்ரோக் ஆகிய மூன்றுமே முக்கிய மற்றும் பெரிய நிறுவனங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஏ.ஐ. ஆப்கள் ஆகும்.இந்த மூன்று நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் முறையே ... மேலும் பார்க்க

AI-யைப் பார்த்து AI நிறுவன தலைவர்களுக்கே பயமா? “வேகத்தைக் குறைப்போம்” வாதத்தின் பின்னணி என்ன?

Artificial Intelligence எனப்படும் AI நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மனிதர்களின் பல வேலைகளைத் தானாகச் செய்யும் அளவுக்கு AI models முன்னேறி வரும் நிலையில், அதன் வளர்ச்சியை சற்று கட்டுப்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

பிரிக்ஸ் கூட்டத்துக்கு டெல்லி வந்த புடின்... கவனம் ஈர்த்த 'Doomsday Plane'!

18-வது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பயணத்தில், அவரது சிறப்பு விமானமான 'Doomsday Plane' கவனம் ஈர்த்துள்ளது. தகவல் தொடர்பு மற்றும் கட்டளைப் பணிகளுக்கா... மேலும் பார்க்க

ஆப்பிள் ரசிகர்களே! ₹3 லட்சத்தில் Foldable iPhone முதல் 18 Pro Max வரை! - என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. iPhone Duo என்ற தனது முதல் Foldable iPhone-ஐ ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 9 அன்று நடந்த ‘Surprise and Shine’ Apple E... மேலும் பார்க்க

AI: `மனித உயிர்களை கொன்றுவிடும்; தெரிந்தே.!' - அந்த்ரோபிக்கில் இருந்து வெளியேறியவர் சொன்ன `ஷாக்'

சிலிக்கான் வேலியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி வந்துகொண்டேதான் இருக்கும். ஆனால், சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு ராஜினாமா, டெக் உலகை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித சமூகத்தையுமே ஒரு நிமிடம் திரு... மேலும் பார்க்க

V2V: `இனி கார்கள் பேசிக்கொள்ளும்' - மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய தொழிற்நுட்பம்! | ஓர் அலசல்

இந்திய விபத்துகளும் உயிர் பலிகளும்!இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தின் எண்ணிக்கையும், அதனால் பறிபோமும் உயிர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ம் ஆண்டில், இந்தியாவில் நடந்த... மேலும் பார்க்க